புதுடெல்லி: ஜோதிடத்தின் படி, சூரியனின் ராசி மாற்றம் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த மாற்றம் அனைத்து 12 ராசிகளுக்கும் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்துகிறது. கிரகங்களின் அரசனான சூரியன் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றுவார். சுமார் ஒரு மாத காலம் ஒரு ராசியில் இருந்து அருள் புரியும் சூரிய பகவான், இந்த மாதம் தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக அக்டோபர் 17ம் தேதி துலாம் ராசிக்குள் நுழைகிறார். சூரியன் துலாம் ராசியில் நுழைவதால் ஏற்படும் மாற்றங்கள் இவை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சூரிய சங்கராந்தி என்று சொல்லப்படும் சூரிய பெயர்ச்சியின் போது, கன்னி ராசிக்காரர்கள் பெரியவர்களின் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். நண்பர்கள் உங்களிடம் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தலாம். ஆனால் நீங்கள் அதிகமாக பேசாதீர்கள், உங்களிடம் கேட்டால் தவிர, யாருக்கும் அறிவுரை கூறாதீர்கள். மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் உங்களை தயார் நிலையில் வைத்திருங்கள்.


மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்


எல்லா இடத்தில் இருந்தும் பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம். அலுவலக வேலைக்காக வெளியூர் அல்லது வெளிநாடு செல்ல வேண்டியிருக்கலாம். நீங்கள் ஓய்வெடுக்க ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும். பயணங்கள் உல்லாசமாக இருக்கும். அதனால் வேலையை அம்போ என்று விட்டுவிடாதீர்கள். ஏனென்றால், வேலை செய்யும் இடத்தில் அவப்பெயர் வருவதற்கான வாய்ப்பு உண்டு. பதவி இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் தென்படுகிறது என்பதால் கவனமாக செயல்படவும்.


கன்னி ராசிக்காரர்களுக்கு சூரியனின் மாற்றம், பணத்தை கொண்டு வந்து சேர்க்கும். வணிகத்தில் நல்ல லாபம் ஈட்டலாம், இது உங்கள் வங்கி இருப்பை அதிகரிக்கும். ஆனால், குடும்பத்தில் நிதித்தேவை அதிகமாகலாம் என்பதால், பணத்தை அதிகம் செலவு செய்ய வேண்டாம்.  


மேலும் படிக்க | Astro: பல தலைமுறைக்கான செல்வத்தை அள்ளித்தரும் கஜகேசரி யோகம்


ஆரோக்கியத்தில் கவனம் தேவை


மாறிவரும் வானிலை காரணமாக சளி மற்றும் காய்ச்சல் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருக்க வேண்டாம். குளுமையான உணவுப் பொருட்களை சாப்பிட வேண்டாம். ஆரோக்கியமாக இருக்க ஒரே அடிப்படைத் தாரக மந்திரம் வீட்டில் செய்த உணவுகளை மட்டுமே சாப்பிடவும்.


வயிற்றில் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. வீட்டை விட்டு வெளியேறும் போது வாகனம் தொடர்பான ஆவணங்கள், வாகன உரிமம், ஹெல்மெட் எதையும் மறக்க வேண்டாம், இல்லையெனில் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். எந்த விதமான தகராறிலும் ஈடுபடாதீர்கள் அல்லது சட்ட விரோதமான வேலைகளைச் செய்யாதீர்கள், இல்லையெனில் அரசு தரப்பில் இருந்து சிக்கல் வரலாம்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை. ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)


மேலும் படிக்க | அக்டோபர் 16ம் தேதியன்று மிகப்பெரிய ராசி மாற்றம்! ’5’ ராசிகளுக்கு கலக்கம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ