குரு பகவானின் அருளாசியால் தீபாவளிக்கு பிறகு உங்களுக்கு அதிர்ஷ்டம் தான்

Jupiter Transit: குரு பார்த்தால் எந்தவொரு தோஷமும் விலகிவிடும். கிரகங்களில் மிக முக்கிய கிரகங்களில் ஒன்றான குரு பகவான், தீபாவளிக்கு பிறகு தனது இயக்கத்தை மாற்றவுள்ளார். தற்போது, வக்ர நிலையில் சஞ்சரித்து வரும் குரு பகவான், அக்டோபர் 26 அன்று மீன ராசியில் இயல்பான இயக்கத்துக்கு மாறுவார்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 13, 2022, 04:04 PM IST
  • குருவின் மாற்றத்தால் 3 ராசிக்காரர்களுக்கு யோகம்
  • வக்ர கதியில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்பும் குரு
  • குரு பார்க்க கோடி நன்மை பெறும் ராசிகள்
குரு பகவானின் அருளாசியால் தீபாவளிக்கு பிறகு உங்களுக்கு அதிர்ஷ்டம் தான் title=

புதுடெல்லி: ஜாதகத்தில குருவின் இருப்பு மிக மிக முக்கியமானது. குரு இருக்கும் இடத்தை வைத்துதான் குல தெய்வ அனுக்ரஹம், முன்னோர்கள் ஆசீர்வாதம், தோஷங்கள் ஆகியவற்றை கணிக்க முடியும். குரு பகவான், எப்போதுமே தான் இருக்கும் வீட்டில் அதிக நற்பலன்களை கொடுப்பதில்லை என்றாலும், குருவின் பார்வை படும் இடங்கள் ஏற்றம் பெறுகிறது என்றும் சொல்லப்படும். குரு பார்த்தால் எந்தவொரு தோஷமும் விலகிவிடும். கிரகங்களில் மிக முக்கிய கிரகங்களில் ஒன்றான குரு பகவான், தீபாவளிக்கு பிறகு தனது இயக்கத்தை மாற்றவுள்ளார். தற்போது, வக்ர நிலையில் சஞ்சரித்து வரும் குரு பகவான், அக்டோபர் 26 அன்று மீன ராசியில் இயல்பான இயக்கத்துக்கு மாறுவார்.

நவம்பர் 24, 2022 வரை இந்த ராசியில் சஞ்சரிக்கும் குருவின் மாற்றத்தால், சில ராசிக்காரர்களின் தலைவிதி மாறும். 

மேலும் படிக்க | இன்னும் ஒரு மாதத்திற்கு நிம்மதியாக இருந்துக் கொள்ளலாம்

ரிஷபம்: மீன ராசியில் குருவின் இயக்கம் நல்ல பலன்களைக் கொடுக்கும். வருமானம் அதிகரிக்கும். புதிய வகைகளில் வருமானம் அதிகரிக்கும். வாகனம், சொத்து வாங்கும் யோகம்  உண்டாகும். உறவுகள் சுமூகமாக இருக்கும். புதிய நபர்களின் சந்திப்பு தொடர்பு அதிகரிக்கும், நினைத்தது நடக்கும்.

மிதுனம்: மீனத்தில் குரு பகவானின் சஞ்சாரம், இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை கொண்டு வரும். மிதுன ராசிக்காரர்களுக்கு முன்னேற்றம் அடையும் காலம் இது. தொழில் மேம்படும். நோயாளிகள் குணமாவார்கள்.

மேலும் படிக்க | ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தில் சிக்கப்போகும் ராசிகள் இவைதான்: இந்த பரிகாரங்கள் உதவும்

கடகம்: குருவின் பாதை மாற்றத்தால் கடக ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி மழை  பொழியும். தடைபட்ட பணிகள் முடிவடையும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். பண வரவு மகிழ்ச்சியைக் கொடுக்கும். வெளிநாட்டு பயணங்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும். 

கும்பம்: மீன ராசியில் குருவின் மாற்றம், கும்ப ராசிக்காரர்களின் நிதி நிலையை வலுவாக்கும். மாணவர்களுக்கும் குரு பெயர்ச்சி சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணியிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Name Astrology: இந்த '5' எழுத்துகள் உங்கள் பெயரில் உள்ளதா? அப்போ அதிர்ஷ்டசாலி நீங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News