Sun Transit In Leo: சூரிய பெயர்ச்சியில் செல்வ மழையில் நனைய செய்ய வேண்டியவை!

சூரிய பெயர்ச்சி 2022: சூரியன் தனது சொந்த ராசியான சிம்மத்தில் நுழைந்துள்ளதால், சூரியனின் இந்த பெயர்ச்சி மிகவும் முக்கியமானது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 18, 2022, 10:54 AM IST
  • சிம்ம ராசியில் சூரியன் சஞ்சாரதினால் பலன் பெறும் ராசிகள்.
  • ஜோதிடத்தில் சூரிய பகவானுக்கு தனி இடம் உண்டு.
  • சொந்த ராசியான சிம்மத்தில் நுழைந்துள்ளதால், சூரியனின் இந்த பெயர்ச்சி மிகவும் முக்கியமானது.
Sun Transit In Leo: சூரிய பெயர்ச்சியில் செல்வ மழையில் நனைய செய்ய வேண்டியவை! title=

சூரிய பெயர்ச்சி 2022: ஜோதிடத்தில் சூரிய பகவானுக்கு தனி இடம் உண்டு. ஆன்மா, தந்தை, மரியாதை, வெற்றி, முன்னேற்றம் மற்றும் அரசு மற்றும் அரசு சாரா துறைகளில் உயர் சேவை ஆகியவற்றின் காரக கிரகமாக சூரியன் கருதப்படுகிறது. ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ராசியை மாற்றுகிறது.  கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படும் சூரியன், 30 நாட்களுக்குப் பிறகு, ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுகிறார். ஆகஸ்ட் 17ம் தேதி, சூரியன் கடக ராசியை விட்டு சிம்ம ராசியில் பிரவேசித்துள்ளார். அதன் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படுகிறது.

 சூரியன் தனது சொந்த ராசியான சிம்மத்தில் நுழைந்துள்ளதால், சூரியனின் இந்த பெயர்ச்சி மிகவும் முக்கியமானது. சில ராசிகளுக்கு மிகவும் சாதகமானதும் கூட. 

சிம்ம ராசியில் சூரியன் சஞ்சாரதினால் பலன் பெறும் ராசிகள்:

ஜோதிட சாஸ்திரத்தின் படி, சிம்ம ராசியில் சூரியனின் பிரவேசம், 4 ராசிக்காரர்களுக்கு  மிகவும் சாதகமாக இருக்கும். இந்த சூரிய சஞ்சாரம் மேஷம், கடகம், சிம்மம், மீனம் ராசிக்காரர்களுக்கு மிகுந்த பலன் தரும். வேலையில் முன்னேற்றம் அடைவார்கள். பணம் கிடைக்கும். நம்பிக்கை அதிகரிக்கும். வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் பெருகும்.

மேலும் படிக்க | Astro: பல தலைமுறைக்கான செல்வத்தை அள்ளித்தரும் கஜகேசரி யோகம்; பலன் பெறும் ராசி இது தான்!

பண வரவு அதிகரிக்க செய்ய வேண்டியவை

ஜாதகத்தில் சூரியன் வலுவாக இருந்தால், அந்த நபர் வேகமாக முன்னேறி நிறைய பணம் சம்பாதிப்பார். சூரிய கிரகத்தில் இருந்து நல்ல பலன்களைப் பெறுவதற்கான சில எளிய பரிகாரங்களை தெரிந்து கொள்வோம்.

சூரியனின் அருளை பெற எளிய பரிகாரங்கள்:

1. ஜாதகத்தில் சூரியனை வலுப்படுத்தி சுப பலன்களைப் பெறவும், வாழ்க்கையில் விரைவாக வெற்றி பெறவும் விரும்பினால், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலையில் குளித்து, ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்யுங்கள். மேலும், பசுவிற்கு வெல்லம் மற்றும் அன்னம் கொடுக்கவும். இந்த பரிகாரத்தை தினமும் செய்து வந்தால் அதிக பலன்கள் கிடைக்கும்.

2. தந்தையின் காரக கிரகமும் சூரியன்தான். எனவே, ஒவ்வொரு நாளும் உங்கள் பெற்றோரின் பாதங்களைத் தொட்டு ஆசீர்வாதம் பெறுங்கள், அதனால் சூரியன் வலுவடைந்து சுப பலன்களைத் தருகிறது.

3. விரைவான வெற்றி, உயர் பதவி பெற, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அதிகாலையில் குளித்து, சிவப்பு நிற ஆடைகளை அணிந்து, 'ஓம் ஹ்ரான் ஹ்ரீம் ஹ்ரௌன் ஸ: சூர்யாய நமஹ' என்ற மந்திரத்தை உச்சரிக்கவும். இந்த மந்திரத்தை  108 முறை ஜபம் செய்யவும்.

4. தினமும் காலையில் சூரியனுக்கு அர்க்கியம் கொடுக்கவும். மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் உப்பு இல்லாமல், விரதம் இருக்கவும். இது பல நோய்களையும் குணப்படுத்துகிறது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை. ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)

மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News