வாஸ்து: இந்த திசையில் மட்டும் வீட்டில் உள்ள பணம், நகையை வெச்சிடாதீங்க, நஷ்டம் அதிகரிக்கும்
Vastu Tips for Locker: வாஸ்து சாஸ்திரத்தில் பணத்தை ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு திசைக்கும் அதற்கான சிறப்பு முக்கியத்துவம் உள்ளது.
பணப்பெட்டிக்கான வாஸ்து குறிப்புகள்: வாஸ்து சாஸ்திரத்தின் படி, பணம் சரியான இடத்தில் மற்றும் சரியான திசையில் வைக்கப்படவில்லை என்றால், அது பண இழப்பு மற்றும் அதிக செலவுகளுக்கு காரணமாகிறது. வாஸ்து சாஸ்திரத்தில் பணத்தை ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு திசைக்கும் அதற்கான சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. வாஸ்து சாஸ்திரத்தின் படி, அனைத்து பொருட்களையும் அதற்கான சரியான இடத்தில் வைக்கவில்லை என்றால், அதற்கு எதிர்மறையான அல்லது எதிர் விளைவுகளை ஏற்படுத்தும்.
வாஸ்து சாஸ்திரத்தில் பணத்தைப் பற்றி பல விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. ஒருவரது பணப்பெட்டி அல்லது பெட்டகம் சரியான திசையில் வைக்கப்படாவிட்டால், அந்த நபர் பல வகையான தொல்லைகளை சமாளிக்க வேண்டியிருக்கும் என்று நம்பப்படுகிறது. அந்த நபரின் நிதி நிலை மோசமடையத் தொடங்குகிறது. வீட்டில் செழிப்பு குறைகிறது. பல நேரங்களில் அந்த நபர் கடனிலும் மூழ்கி விடுகிறார். வாஸ்து சாஸ்திரத்தின் படி எந்த திசையில் பணம் அல்லது பணப் பெட்டியை வைக்க கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க | இந்த 3 மாற்றங்களை செய்தால் வீட்டுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்
மறந்தும் கூட பணத்தை இந்த திசையில் வைக்க வேண்டாம்
ஒரு வீடு என்று எடுத்துக்கொண்டால், அதில் பல திசைகள் உள்ளன. இதில் சில திசைகளில் பணத்தை வைத்தால், அதிகமான நஷ்டம் ஏற்படும். இந்த திசைகளில் ஒன்று தென்கிழக்கு திசையாகும். இது வீட்டின் அக்னி மூலை என்று அழைக்கப்படுகிறது. இந்த இடத்தில் பணத்தை வைப்பதால், செலவுகள் அதிகரிக்கும். மேலும், வருமான வழிகளில் எதிர்மறையான தாக்கம் ஏற்படும். மேலும், குடும்பத் தலைவருக்கு கடன் தொல்லைகள் அதிகரிக்கத் தொடங்குகிறது. மகிழ்ச்சி குறையத் தொடங்குகிறது.
அதே நேரத்தில், வீட்டின் மேற்கு திசையும் பணத்தின் அடிப்படையில் அசுபமாக கருதப்படுகிறது. ஒருவர் வீட்டின் மேற்கு திசையில் பணம் அல்லது நகைகளை வைத்திருந்தால், அது பண இழப்புக்கு வழிவகுக்கும் என்று நன்பப்படுகிறது. மேலும், குடும்ப உறுப்பினர்களுக்கு பண வரவிலும், பணம் ஈட்டுவதிலும் சிரமம் ஏற்படும்.
வீட்டின் மேற்கு மற்றும் வடக்கு திசையில் லாக்கரில் பணப்பெடியை வைப்பது வாஸ்து சாஸ்திரத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. இது வீட்டின் மேற்கு கோணம் என்று அழைக்கப்படுகிறது. இங்கே பணப்பெட்டியை வைத்திருப்பது குடும்ப உறுப்பினர்களுக்கு பல பிரச்சனைகளை உருவாக்கக்கூடும். வீட்டில் இந்த திசையில் பணத்தை வைப்பதால் செலவுகள் அதிகரித்து வருமானம் குறையும் என்பது நம்பிக்கை. மேலும், இந்த திசையில் பணத்தை வைத்தால், கடன் தொல்லைகள் அதிகரிக்கும்.
இந்த திசையில் லாக்கர் / பணப்பெட்டியை வைப்பது உசிதம்
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டின் வடக்கு திசையானது வீட்டில் பணம் இருக்கும் லாக்கர் / பணப்பெட்டி, பணம் அல்லது ஆபரணங்களை பாதுகாப்பாக வைக்க சிறந்ததாக கருதப்படுகிறது. குபேர பகவான் இந்த திசையில் வசிக்கிறார். மேலும், இந்த திசையில் பணத்தை வைப்பதால், அது பன்மடங்காக அதிகரிக்கும், லாபம் பெருகும், வீட்டில் செழிப்பும் மகிழ்ச்சியும் பொங்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | வாஸ்து டிப்ஸ், வீட்டில் மணி பிளான்ட் செடி வளர்க்கலாமா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ