வார ராசிபலன்: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இயக்கமும் மாற்றமும் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கம் அனைத்து 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கிரகங்களின் சஞ்சாரத்தால் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலனும் ஏற்படுகிறது. கிரகங்களின் இயக்கத்தை வைத்து ராசிபலன் கணக்கிடப்படுகிறது. கிரகங்களின் சஞ்சாரத்தால், எதிர் வரும் வாரம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அனுகூலமாக இருக்கும் என்றால், சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிலும், எதிர்வரும் வாரம் முடிந்த உடன், அடுத்த நாளே அதாவது, டிசம்பர் ஐந்தாம் தேதி சுக்கிரன் தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதில் பலருக்கும் வெவ்வேறு விதமான பலன்கள் ஏற்படும்.


அதன் அடிப்படையில் பார்க்கும்போதும், இந்த வார கிரகங்களின் சஞ்சாரத்தின் அடிப்படையில் சொல்லும் இந்த ராசிபலன் மிகவும் முக்கியம் வாய்ந்தது. வரும் வாரத்திற்கான ராசிபலன்களில் மேஷம் முதல் கன்னி வரையிலான ஆறு ராசிகளுக்கான பலன்கள் இவை...


மேலும் படிக்க | சூரியன் சுக்கிரன் சேர்க்கை: அடுத்த 15 நாட்களுக்கு இந்த ராசிகளுக்கு ராஜயோகம்


மேஷம்: வேலையில் கவனம் செலுத்துங்கள், ஏனெனில் இந்த வாரம் தொழில் வாழ்க்கையில் மிகவும் பரபரப்பாக இருக்க வேண்டி இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் சில பிரச்சனைகள் இருக்கலாம். கவனத்துடன் செயல்பட்டால் எல்லா பிரச்சனைகளையும் சமாளிக்கலாம்.


ரிஷபம்: இந்த நேரத்தில், ரிஷபம் ராசிக்காரர்களின் முழு கவனமும் தொழிலில் முன்னேற்றம் மற்றும் வருமானத்தை அதிகரிப்பதில் இருக்கும். திருமணமாகாதவர்கள் மகிழ்ச்சியடையும் செய்தி வரும். வருமானம் அதிகரிக்கும்.


மேலும் படிக்க | தனுசு ராசிக்கு செல்லும் சுக்கிரப் பெயர்ச்சியால் குதூகலிக்கலாம்: 4 ராசிகளுக்கு சூப்பர்


மிதுனம்: மிதுன ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை, திருமண வாழ்க்கை நன்றாகவே இருக்கும். அலட்சிய உணர்வு இருக்கும். வேலையில் நிலைமை சாதாரணமாக இருக்கும்.


கடகம்: வேலைப்பளு அதிகமாக இருக்கும். பொறுப்புகளால் சுமை கூடும். வேலை செய்து செய்து மந்தமாக உணர்வீர்கள். தனிப்பட்ட வாழ்க்கை நன்றாக இருக்கும்.


சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு தொழில் வாழ்க்கையில் புதிய வாய்ப்பு கிடைக்கும். வருமானம் கூடும். காத்திருந்த பணமும் லாபமும் இப்போது கிடைக்கும். நேர்மறை எண்ணங்கள் மேலோங்கும்.


கன்னி: போட்ட பயணத் திட்டங்கள் எதுவும் நிறைவேறாது. இதனால் மனதில் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். மனதில் காதல் துளிர்விடலாம். உங்களுக்கு நெருக்கமான அல்லது நெருங்கிய நபர் மீது ஈர்ப்பு அதிகரிக்கும்.


மேலும் படிக்க | தனுசு ராசிக்கு சஞ்சரிக்கும் சுக்கிரனால் பாதிக்கப்படும் ராசிகள்! பரிகாரங்கள் பலன் தரும்


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றுக்கு பொறுப்பேற்காது.)


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ