தனுசு ராசிக்கு செல்லும் சுக்கிரப் பெயர்ச்சியால் குதூகலிக்கலாம்: 4 ராசிகளுக்கு சூப்பர்

Venus Transit December 2022: டிசம்பர் ஐந்தாம் தேதி சுக்கிரன் பெயர்ச்சி தனுசு ராசியில் ஏற்படும். அதில் 4 ராசிகளுக்கு அருமையான வாழ்க்கை அமையும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 27, 2022, 09:33 AM IST
  • சுக்கிரனின் அருளால் வளமாய் வாழப்போகும் ‘4’ ராசிகள்
  • டிசம்பர் 5 சுக்கிரப் பெயர்ச்சி
  • தனுசு ராசிக்கு மாறும் சுக்கிரன்
தனுசு ராசிக்கு செல்லும் சுக்கிரப் பெயர்ச்சியால் குதூகலிக்கலாம்: 4 ராசிகளுக்கு சூப்பர் title=

Venus Transit December 2022: 5 ராசிக்காரர்களுக்கு டிசம்பர் 5 முதல் அதிக அன்பும் பணமும் வளமான வாழ்க்கையும் கிடைக்கும், வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கச் செய்வதற்காக சுக்கிர பகவான், தனுசு ராசிக்கு மாறுகிறார். இந்த சுக்கிரனின் சஞ்சாரம், சிலருக்கு மிகவும் சாதகமாக அமைகிறது. ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தனது ராசியை மாற்றி மற்றொரு ராசிக்குள் நுழைகிறது. இது அனைத்து 12 ராசிகளையும் பாதிக்கிறது. டிசம்பர் 5ம் தேதி தனுசு ராசிக்கு செல்லும் சுக்கிரன்,  டிசம்பர் 29 வரை அங்கு இருக்கிறார்

சுக்கிரன் செல்வம், ஆடம்பரம், அன்பு, அழகு, ஈர்ப்பு ஆகியவற்றைத் தருகிறார். சுக்கிரன் டிசம்பர் 5-ம் தேதி தனுசு ராசிக்குள் நுழைகிறார். தற்போது விருச்சிக ராசியில் உள்ள சுக்கிரன் தனது ராசியை மாற்றி தனுசு ராசியில் பிரவேசித்து டிசம்பர் 29-ம் தேதி வரை இருந்துவிட்டு, பிறகு மகர ராசிக்குள் நுழைவார். இந்த சுக்கிரனின் சஞ்சாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரும் என்பதை தெரிந்து கொள்வோம்.

சுக்கிரனின் ராசி மாற்றத்தால் வாழ்வில் செல்வச் செழிப்பும், ஆடம்பரமும் மட்டுமல்ல, காதலும், நேசமும் அதிகரித்து இன்பமாய் வாழப்போகும் 5 ராசிகள் இவை... 

மேலும் படிக்க | டிசம்பரில் இந்த ராசிகளுக்கு தன ராஜயோகம்: கிரக மாற்றத்தால் எக்கச்சக்க பண வரவு 

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் சஞ்சாரம் பல நன்மைகளைத் தரும். பணவரத்தும், பொருள் சேகாரிப்பும் சாத்தியமாகும். வாழ்வில் சுகபோகங்கள் அதிகரிக்கும். உங்கள் ஈர்ப்பு அதிகரிக்கும். திருமண வாழ்க்கையிலும் காதல் வாழ்க்கையிலும் இது வசந்த காலம் என்றே சொல்லலாம். குடும்பத்தில் அனைவருடனும் உறவு சிறப்பாக இருக்கும். தொழில்-வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.

சிம்மம்: சுக்கிரனின் ராசி மாற்றம் சிம்ம ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். அவர்களின் திருமண வாழ்க்கையில் காதல் மட்டுமே இருக்கும். நீண்ட காலத்திற்குப் பிறகு, அவர்கள் உறவில் அற்புதமான புத்துணர்ச்சியை உணர முடியும். புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். பழைய உத்தியோகத்தில் பதவி உயர்வு  உண்டாகும். மக்கள் உங்களை பாராட்டுவார்கள், மதிப்பார்கள்.

மேலும் படிக்க | ரிஷப ராசியில் வக்ர செவ்வாய்: 108 நாட்கள் கஷ்டப்படப் போகும் ராசிகள் ‘3’

விருச்சிகம்: விருச்சிக ராசியில் இருந்து விலகி தனுசு ராசியில் பிரவேசிக்கும் சுக்கிரன் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தருவார். வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் பெருகும். பண வரத்து சாதகமாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். வெளிநாட்டு பயணம் செல்லலாம். குடும்பமாக பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புகலும் உண்டு. வேலை மற்றும் வியாபாரத்திற்கும் நேரம் சாதகமாக இருக்கும்.

கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரம் சாதகமாக அமையும். புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும். கடனில் இருந்து விடுதலை கிடைக்கும். செயல்களில் வெற்றி உண்டாகும். நீண்ட காலமாக முழுமையடையாமல் இருந்த இதுபோன்ற சில வேலைகள் வெற்றிகரமாக முடியும். காதல் துணையுடனான அன்பு அதிகரிக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மிடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | தனுசு ராசிக்கு சஞ்சரிக்கும் சுக்கிரனால் பாதிக்கப்படும் ராசிகள்! பரிகாரங்கள் பலன் தரும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News