தனுசு ராசிக்கு சஞ்சரிக்கும் சுக்கிரனால் பாதிக்கப்படும் ராசிகள்! பரிகாரங்கள் பலன் தரும்

December 5 Shukra Uday: டிசம்பர் ஐந்தாம் தேதி சுக்கிரன் பெயர்ச்சியால் பாதிக்கப்படும் ராசிகளுக்கான பரிகாரங்கள் 

Last Updated : Nov 27, 2022, 07:03 AM IST
  • வீட்டில் நறுமணம் பரப்ப வேண்டிய ராசிக்காரர்கள்
  • துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சியால் நன்மை
  • ஊனமுற்றோருக்கு தானம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள்
தனுசு ராசிக்கு சஞ்சரிக்கும் சுக்கிரனால் பாதிக்கப்படும் ராசிகள்! பரிகாரங்கள் பலன் தரும்  title=

தனுசு ராசியில் சுக்கிரன் பரிவர்த்தனையாக இன்னும் ஒரு வாரமே உள்ளது. சுக்கிரனின் இந்தப் பெயர்ச்சி பல்வேறு இராசிகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதைத் தெரிந்துக் கொண்டு முன்னெச்சரிக்கையாக இருந்தால், சுக்கிரனின் பெயர்ச்சியை ஆக்கப்பூர்வமாக எதிர்கொள்ளலாம். சுக்கிரன் கிரகம், சுப கிரகமாக இருப்பதால், ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் அனுகூலமான இடத்தில் இருந்தால், சுகபோகங்களை அனுபவிக்கலாம். தனுசு ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி டிசம்பர் 5, 2022 அன்று 17:39 மணிக்கு நடைபெறுகிறது.  

தனுசு ராசியில் சுக்கிரன் சஞ்சாரம்
தனுசு ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி 5 டிசம்பர் 2022 திங்கட்கிழமை நடைபெற உள்ளது. குரு சுக்ராச்சாரியார், தேவகுரு வியாழனால் ஆளப்படும் தனுசு ராசிக்கு பரிவர்த்தனை ஆகிறார். வேத ஜோதிடத்தில் தனு ராசி என்றும் அழைக்கப்படும்  தனுசு ராசி, ராசி வட்டத்தின் ஒன்பதாவது ராசியாகும்.  

சுக்கிரன் ஒரு பெண் கிரகமாக கருதப்படுகிறது. ரிஷபம் மற்றும் துலாம் ஆகிய இரண்டு ராசிகளுக்கு அதிபதியான சுக்கிரன் வாழ்வில் செல்வம், செழிப்பு, இன்பம், மகிழ்ச்சி, ஈர்ப்பு, அழகு, இளமை, காதல் ஆசைகள், அன்பின் திருப்தி ஆகியவற்றையும், படைப்பாற்றல், கலை, இசை, கவிதை, வடிவமைப்பு, பொழுதுபோக்கு, நிகழ்ச்சிகள், கவர்ச்சி, பேஷன், நகைகள், விலையுயர்ந்த கற்கள், ஒப்பனை, ஆடம்பர பயணம், ஆடம்பர உணவு, ஆடம்பர வாகனங்கள் என சுகபோகங்களையும் வழங்குகிறது. 

 மேலும் படிக்க | ஏழரை சனியால் பாதிப்பா? இந்த பரிகாரங்கள் போதும், அள்ளிக்கொடுப்பார் சனி பகவான் 

தனுசு ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி டிசம்பர் 5, 2022 அன்று 17:39 மணிக்கு நடைபெறுகிறது. ஒரு குரு, மற்றொரு குருவின் வீட்டிற்கு வருகிறார். சுக்கிரன் மற்றும் குரு ஆகிய இருவருமே குரு என்பதும், இருவரும் ஒருவருக்கொருவர் பகை கொண்டவர்கள். ஜனன ஜாதகத்தில் சுக்கிரனின் நிலையே இந்த பெயர்ச்சியை துல்லியமாக சொல்லும் என்றாலும், பொதுவான பலன்களை தெரிந்துக் கொண்டு கிரக சாந்தி செய்துக் கொண்டால் வளமான வாழ்வு வாழலாம்.

சுக்கிரனின் இந்த சஞ்சாரத்தால் அதிக நன்மைகள் கிடைக்கவும், தீமைகளை ஒழிக்கவும் செய்ய வேண்டிய பரிகாரங்கள் இவை... 

மேஷம்
பரிகாரம்- வெள்ளிக்கிழமை அன்று லட்சுமி தேவியை வழிபட்டு தாமரை மலர்களை அர்ச்சிக்கவும்.

ரிஷபம்
பரிகாரம் - மகிஷாசுர மர்தினி ஸ்தோத்திரத்தை தினமும் பாராயணம் செய்யவும்

மிதுனம் 
பரிகாரம்- ஆசிரியர்களுக்கு மரியாதை செய்வதுடன், அவர்கள் மனதை குளிர வைக்கவும்.

மேலும் படிக்க | உதயமானார் சுக்கிரன்: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், நினைத்தது நடக்கும்

கடகம்

பரிகாரம்- பார்வையற்றவர்களுக்கு சேவைகள் மற்றும் உதவி செய்வது

சிம்மம்
பரிகாரம் - வெள்ளிக்கிழமைகளில் கிரீம் அல்லது இளஞ்சிவப்பு நிற ஆடைகளை அணியுங்கள்.

கன்னி
பரிகாரம்- வெள்ளிக்கிழமையன்று உங்கள் வீட்டில் வெள்ளைப் பூக்களை வாங்கி அலங்கரிக்கவும்.

துலாம்

பரிகாரம்- சுக்கிர கிரகத்தின் சுப பலன்களைப் பெற உங்கள் வலது கை சுண்டு விரலில் வைரத்தை அணியவும்.

விருச்சிகம்
பரிகாரம் - 'ஓம் சுக்ராய நம' என்று ஒரு நாளைக்கு 108 முறை ஜபிக்கவும்.

மேலும் படிக்க | ரிஷப ராசியில் வக்ர செவ்வாய்: 108 நாட்கள் கஷ்டப்படப் போகும் ராசிகள் ‘3’

தனுசு

பரிகாரம்- தினமும் வீட்டில் ஊதுபத்தி, சாம்பிராணி என வீட்டில் நறுமணத்தை பரப்புங்கள்குறிப்பாக சந்தன நறுமணம் நல்ல பலன்களைத் தரும்.

மகரம்

பரிகாரம்- வெள்ளிக் கிழமையன்று உங்கள் பணப்பையில் ஒரு வெள்ளித் துண்டை வைத்துக் கொள்ளுங்கள்.

கும்பம்

பரிகாரம்- வைபவ லக்ஷ்மி தேவியை வணங்கி விரதம் இருந்து வெள்ளிக் கிழமைகளில் செம்பருத்திப் பூவை வீட்டில் தெய்வங்களுக்கு சாற்றி வழிபடவும்.

மீனம்

பரிகாரம் - உங்கள் பணியிடத்தில் உள்ள பெண்களையும், உங்களை விட இளையவர்களையும் மதிக்கவும். மேலும் பணியிடத்தில் ஸ்ரீ யந்திரத்தை வைத்திருங்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மிடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | டிசம்பரில் இந்த ராசிகளுக்கு தன ராஜயோகம்: கிரக மாற்றத்தால் எக்கச்சக்க பண வரவு 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News