இந்து மதத்தில் நமது வாழ்க்கையின் அனைத்துமே தெய்வத்தால் தீர்மானிக்கப்படுகிறது என்ற நம்பிக்கை வலுவானதாக இருக்கும். தலைவிதி, கர்மா, செய்யும் செயல்களுக்கேற்ப தண்டனை என பல நம்பிக்கைகள் இருந்தாலும், தெய்வ வழிபாடு என்பது மனதில் நிம்மதியையும், அமைதியான வாழ்க்கையையும் கொடுக்கும் என்று இந்துக்கள் நம்புகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்துக் கடவுள்களில் மும்மூர்த்திகள் எனப்படும் பிரம்மா, விஷ்ணு, சிவன் முதல், அவர்களின் குடும்பத்தை சேர்ந்த சரஸ்வதி, லட்சுமி, பார்வதி, விநாயகர், முருகர் போன்ற தெய்வங்கள் மட்டுமல்ல, நவகிரகங்களும், கோடிக்கணக்கான தேவர்களும் வழிபாட்டிற்கு உரியவர்கள் என்பது இந்து மத நம்பிக்கை.


எந்த தெய்வத்தை வணங்கினால், என்ன பிரச்சனைக்கு விடிவு காலம் கிடைக்கும் என்று பரவலாக இருக்கும் மத நம்பிக்கைகளின் படி இந்த கட்டுரை,  உங்களுக்கு வளமான வாழ்க்கைக் கொடுக்கும் வழிபாட்டு தகவல்களைத் தரும் நோக்கத்தில் எழுதப்பட்டுள்ளது.


விநாயகர் வழிபாடு
எந்தவொரு நல்ல காரியத்தைத் தொடங்கும்போதும் விநாயகரை துதிப்பது வழக்கம். அதேபோல, கண் திருஷ்டி கணபதியை வீட்டு வாசலில் வைத்தால், வீட்டில் அனைவரும் நிம்மதியாக இருக்கலாம், திருஷ்டி ஏற்படாது என்பது நம்பிக்கை. கணபதி வழிபாடு அனைத்திலும் சிறந்தது.  


சங்கடஹரசதுர்த்தியில் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி, அர்ச்சனை செய்து வழிபட்டால் சங்கடங்கள் தீரும். சங்கடஹர சதுர்த்தியில் விநாயகருக்கு எருக்கம் திரி போட்டு விளக்கு ஏற்றுவது நல்லது.


மேலும் படிக்க | புதன் அஸ்தமனம்.... வாழ்க்கையில் பிரச்சனையை சந்திக்கும் ‘சில’ ராசிகள்!


சிவன் வழிபாடு
 சிவாலயத்தில் இருக்கும் வன்னி மரம் எனப்படும் வில்வ மரத்தை 21 முறை சுற்றி வந்து நமது குறைகளை சொல்லி வேண்டிக் கொண்டால் வாழ்க்கையில் நிம்மதி ஏற்படும்.  வன்னி மரத்துக்கு நமது குறைகளை கேட்கும் சக்தி உள்ளதாக பலர் நம்புகின்றனர்.


நரசிம்மர் வழிபாடு
கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ யோக நரசிம்மரை வழிபடலாம். அதேபோல, கடன் தொல்லைகளை ஸ்ரீ லட்சுமி நரசிம்மரையும் வழிபடலாம். அதேபோல, பில்லி, சூனியம், ஏவல், திருஷ்டி, திருமண தடைகளுக்கு நரசிம்மரை வழிபடவும்.


சக்கரத்தாழ்வார்
சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி 48 நாட்கள் சுற்றி வழிபட தொழில், வழக்குகள் தீரும், ஏவல் மற்றும் பில்லி சூனியம்  நீங்கும்.


முருகன் வழிபாடு


சிவனின் மைந்தன், சிவகுமரன் முருகப்பெருமானுக்கு செவ்வாய் தோறும் நெய்விளக்கு ஏற்றி வழிபட வேலை கிடைக்கும்.  அவிட்ட நட்சத்திரத்தன்று முருகனுக்கு அர்ச்சனை செய்வது விபத்துகள் நேராமல் தடுக்கும். 


சனிதோஷம் தீர வழிபாடு
சனிபகவானின் பாதிப்பு குறைய திங்கட்கிழமைகளில் சிவபெருமானுக்கு பால் அபிசேகம் செய்து, அர்ச்சனை செய்ய வேண்டும். சனிக்கிழமைகளில் சனி பகவான் சந்நிதியில் தேங்காய் உடைத்து, தேங்காய் மூடிகளில் நல்லெண்ணெய் ஊற்றி, எள்ளு முடிச்சு தீபம் ஏற்றவும். 


மேலும் படிக்க | மகரத்தில் புத-ஆதித்ய யோகம்... அனைத்து ராசிகளுக்கான முழு பலன்கள்!


செய்வினை தோஷம்
சிவன் கோவிலில் கால பைரவரையும், விஷ்ணு கோவிலில் சக்கரத்தாழ்வாரையும் வழிபட செய்வினை தோஷம் நெருங்காது.


கடன் வசூலாக வழிபாடு
பிறருக்குக் கொடுத்த கடன் வசூல் ஆக, பைரவர் சந்நிதியில் 8 செவ்வாய் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால் கடன் வசூலாகும்.


நாக வழிபாடு
இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல் இருக்கும் நாகர் சிலைக்கு, வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் (10:30 - 12:00) மஞ்சள், குங்குமம் வைத்து, பூ சாற்றி அபிஷேகம் செய்து வந்தால், திருமணமான தம்பதிகளிடையே இருக்கும் சண்டை தீரும், மனம் ஒத்து வாழ்வார்கள்.


தீப வழிபாடு
எந்தவொரு கஷ்டம் வந்தாலும், குடியிருக்கும் பகுதிகளில் உள்ள ஆலயங்களில் தீபம் ஏற்றி வழிபடுவது மிகச் சிறந்த தீர்வாகும். அதேபோல, கோவிலில் உள்ள திரிசூலத்தில் குங்குமம் இட்டு எலுமிச்சை பழம் குத்தி வழிபட்டால் செய்வினை தோஷம் நீங்கும்.


மேலும் படிக்க | தனயோகம்... மகாலட்சுமியின் அருளால் செல்வமும் வளமும் பெரும் 'சில' ராசிகள்!
 
பிரதோஷ வழிபாடு
பிரதோஷத்தில் சிவனை வழிபட்டால், எல்லா பிரச்சனைகளும் தீரும். 


திருமணத் தடை நீங்க சிவ வழிபாடு
 உத்திர நட்சத்திரத்தன்று சிவனுக்கு 11 மாதங்கள் பால் அபிசேகம் செய்தால், விரைவில் திருமணம் நடைபெறும்.


துர்க்கை வழிபாடு 
ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு சிறந்தது. ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு நெய் விளக்கு ஏற்றவும் ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 - 6:00 மணிக்குள் துர்க்கைக்கு விளக்கு ஏற்றி வழிபட்டால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். அதேபோல, வெள்ளிக்கிழமை காலை 10:30 - 12:00 ராகு காலத்தில் துர்க்கைக்கு தாமரை தண்டு திரி போட்டு நெய் விளக்கு ஏற்றினால், குடும்பத்திற்கு இருக்கும் சாபங்கள் தீரும்.  


பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.


மேலும் படிக்க | கொரியர்களின் பாட்டி இராமருக்கு பேத்தி! கொரிய சாம்ராஜ்ஜியத்தை ஆண்ட அயோத்தி இளவரசி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ