Why Koreans Want To Visit Ayodhya: தென் கொரியாவில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள், தங்களை இந்தியர்களின் வழித்தோன்றல் என்று நம்புகின்றனர். இது சரித்திரத்தில் இடம் பெற்றுள்ள ஒரு முக்கியமான நிகழ்வாகும். இந்த நம்பிக்கையின்படி, இரு வாரங்களுக்கு முன்னர் இந்தியாவில் ராமர் பிரதிஷ்டை விழாவுக்கு பல கொரியர்கள் வந்து கலந்துக் கொள்ள விரும்பினார்கள். பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள பால ராமர் அல்லது குழந்தை ராமரை தரிசிக்க இந்தியாவிற்கு வர கொரிய மக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் இருந்து நான்காயிரத்து ஐநூறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தென் கொரியாவில் வசிக்கும் "காரக்" சமூகத்தைச் சேர்ந்த மக்கள், அயோத்தியை தங்கள் பாட்டி வீடாக கருதுகின்றனர். அதனால் தான், ஜனவரி 22 அன்று, அயோத்தி ராமர் கோவில் பிராணபிரதிஷ்டை நிகழ்ச்சியை தென்கொரியாவில் உள்ள மக்கள் தொலைக்காட்சியில் பார்த்து பரவசப்பட்டனர்.
கொரியாவிற்கும் அயோத்திக்கும் இடையே உறவு
தென் கொரியாவில் சுமார் 60 லட்சம் மக்கள் தங்களை இந்தியர்களின் வழித்தோன்றலாக கருதுவது இந்தியர்களில் பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. தங்களை அயோத்தி இளவரசி சூரிரத்னாவின் வழித்தோன்றல்களாக கருதும் மக்கள், அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்ய விரும்புகின்றனர்.
அயோத்தி இளவரசி சூரிரத்னா
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக கி.பி 48 இல் கொரியாவின் மன்னர் கிம் சுரோவை மணந்த அயோத்தி இளவரசி சூரிரத்னாவின் கதை இது. கொரியா நாட்டின் புராணங்களின்படி, சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு, அயோத்தியின் இளவரசி சூரிரத்னா கொரியாவுக்கு 4,500 கிலோமீட்டர் பயணம் செய்து கயா (இன்றைய கொரியா) பேரரசை நிறுவிய கிம் சுரோவை மணந்தார். கொரியாவின் ராணியாக பட்டம் சூட்டப்பட்டபோது, இளவரசி சூரிரத்னாவின் பெயர் ஹியோ ஹ்வாங் ஓக் என்று மாறியது.
ராணி ஹியோ ஹ்வாங் ஓக் என்று பெயர் மாறினாலும், அவர் பிறந்து வளர்ந்தது அயோத்தியில் தான் என்பது கொரியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வலுவான கலாச்சார மற்றும் மத உறவுகளின் அடிப்படையாக உள்ளது.
மேலும் படிக்க | 250 கோடி ஆண்டுகள் பழமையான கல்லில் வடிக்கப்பட்ட அயோத்தி ராமர் சிலை!
குடும்பத்துடன் அயோத்திக்கு வர திட்டமிடும் கொரியர்கள்
2001 ஆம் ஆண்டு உத்தரபிரதேச அரசு மற்றும் தென் கொரியா அரசு இடையே பரஸ்பர ஒத்துழைப்போடு சரயு நதிக்கரையில் ராணி ஹியோ ஹ்வாங் ஓக் நினைவிடம் ஒன்று நிறுவப்பட்டது. தங்களை அயோத்தி இளவரசி சூரிரத்னாவின் வழித்தோன்றல்களாகக் கருதும் தென் கொரியாவின் "காரக்" சமூகத்தைச் சேர்ந்தவர்கள், ஆண்டுதோறும் அயோத்திக்கு வந்து ராணி ஹியோ ஹ்வாங் ஓக்கின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்கள்.
ராணி ஹியோ மெமோரியல் பூங்காவிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் தான் குழந்தை இராமருக்கு அயோத்தியில் கோவில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அயோத்தி ராமர் கோவில், கொரிய சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கான காரணம் இதைவிட வேறு என்ன இருக்க முடியும். இனிமேல் அயோத்தி, கொரிய மக்கள் சுற்றுலா செல்ல விரும்பும் இடங்களில் ஒன்றாக மாறிவிடும்.
தென்கொரியாவில் உள்ள மக்கள் அயோத்தியை தங்கள் மூதாதையரின் பூர்வீகமாக பார்ப்பது போல, வடகொரியாவிலும் பெருமளவிலான மக்களும் நினைக்கலாம். ஏனென்றால், கொரியா இரண்டாக பிரிவதற்கு பல நூற்றாண்டுகள் முன்னதாக அதாவது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக அயோத்தி இளவரசி, கொரிய ராணியாக மாறிவிட்டார். ஆனால், வடகொரியாவின் ஆட்சியும் நிர்வாகமும், மக்களின் விருப்பத்தை வெளியில் சொல்லக்கூட விடுவதில்லை.
பண்டைய கொரிய வரலாற்று இலக்கியமான "சம்குக் யூசா" என்பதன்படி, கி.பி 48 இல் கொரியாவிற்கு "அயுதா" விலிருந்து ராணி கிம்ஹே ஹியோ வந்ததாக கூறப்படுகிறது.
X ஊடகத்தில் தென் கொரிய தூதரகம் ஜனவரி 22 அன்று நடந்த புனித விழா தொடர்பாக இந்தியாவிற்கு தெரிவித்த வாழ்த்தில், "அயோத்தி, கொரியா-இந்தியா உறவுகளுக்கான முக்கிய இடம் ஆகும். ராணி சூரிரத்னா (ஹியோ ஹ்வாங்-ஓக்) இடையேயான திருமண இணைப்பின் அடிப்படையில் ஒரு பெரிய அடையாள முக்கியத்துவம் வாய்ந்தது. கி.பி 48 இல் கயா (கொரியா) விற்கு அயோத்தியில் இருந்து வந்த எங்கள் மூதாதையரின் பிறந்த இடத்தில் நடைபெறும் புனித விழாவுக்கு வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளது.
2015 ஆம் ஆண்டில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தென் கொரிய முன்னாள் அதிபர் மூன் ஜே-இன் இருவரும், இளவரசி சூரிரத்னா நினைவிடத்தை விரிவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்
தென் கொரியாவில் தூதராக பணியாற்றிய இந்திய தூதர் என் பார்த்தசாரதி, சூரிரத்னாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ஒரு நாவலை எழுதினார். இந்த நாவல், கொரிய மொழியில் "பி டான் ஹ்வாங் ஹூ" என்று மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. கொரியாவில் அயோத்தி இளவரசி தொடர்பான நாவலை அடிப்படையாகக் கொண்டு, நேஷனல் புக் டிரஸ்ட் ஆஃப் இந்தியா குழந்தைகள் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க | அமெரிக்க விசா கட்டணங்கள் உயர்த்தப்பட்டன! அதிர்ச்சியளிக்கும் 203% வரை கட்டண உயர்வு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ