விஜய ஏகாதசி 2023: ஏகாதசி விரதம் இந்துக்களுக்கு மிகவும் முக்கியமானது. அதிலும் மாசி மாத ஏகாதசி மிகவும் விசேசமானவை. ஏகாதசையன்று விரதம் இருந்து பழங்களை தானம் செய்வதால் ஒளிமயமான வாழ்க்கை அமையும். வெறும் பழங்களை மட்டுமே சாப்பிட்டும் இந்த விரதத்தை இருக்கலாம். மாசி மாத  தேய்பிறையில் வருவது விஜய ஏகாதசியில் விரதம் இருப்பவர்களுக்கு எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம். ஏகாதசி விரதம் ஒன்று இருந்தால், அது ஒரு அஸ்வமேத யாகம் செய்வதற்கு இணையான பலனை தரும் என்பது இந்து மத நம்பிக்கை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எந்த ராசிக்காரர்கள், ஏகாதசி விரததத்தைக் கண்டிப்பாக இருக்க வேண்டும்? தெரிந்துக் கொண்டால், இறைவனின் அருளுடன், வாழ்வில் மகிழ்ச்சியாக வாழலாம் அல்லவா?


விஜய ஏகாதசி இந்து மதத்தில் மிக முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. பகவான் ஸ்ரீராமரும் இலங்கைக்கு செல்லும் முன் விஜய ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடித்தார். இந்த ஆண்டு 2023 அன்று விஜய ஏகாதசி பிப்ரவரி 16ம் நாளான இன்று வந்துள்ளது. இன்று விஜய ஏகாதசி விரதத்தை மேற்கொள்வதன் மூலம், எதிரிகளை வெற்றி கொள்ளலாம்.


மேலும் படிக்க | கும்பத்தில் 3 பெரிய கிரகங்களின் சேர்க்கை, இந்த 3 ராசிக்காரர்கள் சரவெடி ஜாக்பாட்


மேலும் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் பெறுவதற்கு உதவும் ஏகாதசி விரதம். அதிலும், இந்த ராசிக்காரர்கள், ஏகாதசி விரதத்தை வைப்பது அவர்களின் வளமான வாழ்வுக்கு நல்லது. மகாவிஷ்ணுவின் அபரிமிதமான அருளால் ஒவ்வொரு செயலிலும் வெற்றி பெற இந்த விஜய ஏகாதசி விரதம் உதவும்.


இன்றைய அதிர்ஷ்ட ராசிகள்


மேஷம்: உங்கள் கனவுகள் நனவாகும் நேரம் வந்துவிட்டது. இன்று சில நல்ல செய்திகள் வந்துசேரும். மனதை மகிழ்ச்சியடையச் செய்யும். ஆனால் அதீத உற்சாகம் ஆபத்தில் கொண்டுபோய் விடும் என்பதையும் புரிந்துக் கொள்ளவும். குடும்பத்திற்காகவும் நேரம் ஒதுக்கினால், இந்த நாள், இனிய நாளாக இருக்கும்.


ரிஷபம்: பந்தயம், ஷேர் மார்க்கெட் போன்ற அபாயகரமான முதலீடுகளால் நல்ல லாபம் கிடைக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவு கிடைக்கும். உங்கள் முயற்சிகளை மக்கள் பாராட்டுவார்கள். தொழில் செய்பவர்களுக்கு நல்ல நாள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.


மேலும் படிக்க | மீனத்தில் சுக்கிரன் சஞ்சாரம்: இந்த ராசிகளுக்கு சுக்கிர தசை, அமோகமான வாழ்வு


கடகம்: இன்று வெளியில் சென்று வாழ்க்கையை ஆராய வேண்டிய நாள். வீடு-அலுவலகத்திற்கு வெளியே உள்ள உலகத்தைப் பார்த்து அதிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள். திருமண சுகம் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு அனுகூலமான நாள் இன்று.


துலாம்: இன்று உங்கள் மரியாதை அதிகரிக்கும். அரசியலில் இருப்பவர்கள் வெற்றி பெறலாம். பயணத்திற்கான வாய்ப்புகள் அமையும். இன்றைய நாள் தொழிலுக்கு சாதகமான நாளாக அமையும். கடின உழைப்பு அதிகமாக இருக்கலாம் ஆனால் வெற்றியும் வரும்.


மகரம்: இன்று உங்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் அதிக லாபம் பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களும் நன்மை அடைவார்கள். இருப்பினும், ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும்.


மேலும் படிக்க | பணவரத்து இருந்தாலும் எப்போதும் கையில் பணம் இல்லாமல் தவிக்கும் ராசிகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ