நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியின் தினேஷ் கார்த்திக், தொடர்ச்சியாக அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

களத்தில் அவருக்குக் குறைவான நேரமே கிடைக்கும் பட்சத்திலும் அவ்வணிக்கு நடப்பு சீசனில் முக்கியத் துருப்புச்சீட்டாக விளங்கிவருகிறார் தினேஷ் கார்த்திக். பின் வரிசையில் களமிறங்கும் கார்த்திக் இதுவரை 7 போட்டிகளில் 210 ரன்கள் குவித்துள்ளார். இதில் முக்கியமான விஷயம்-  7 போட்டிகளில் ஒருமுறை மட்டுமே அவர் அவுட் ஆகியுள்ளார்; மற்ற ஆறிலும் அவர் நாட்- அவுட்!


இதனால் அவரது பேட்டிங் ஆவேரேஜும் ஏகபோகமாக எகிறியுள்ளது. அந்த வகையில் அவரது பேட்டிங் ஆவரேஜ் தற்போது 210.00 ஆக உள்ளது. அதிரடியாக விளையாடிவரும் அவரது ஸ்ட்ரைக் ரேட் 205.88 ஆக உள்ளது. நடப்பு சீசனில் அவர் குவித்துள்ள 210 ரன்களில் 18 பவுண்டரிகளும் 15 சிக்ஸர்களும் அடித்து அசத்தியுள்ளார்.


                                                     


தினேஷ் கார்த்திக்கைப் பொறுத்தவரை விக்கெட்டின் எந்தத் திசையிலும் பந்தை அடித்து ரன் சேர்க்கும் திறமைக்காரராக உள்ளதால் ‘இந்தியன் 360’ என ரசிகர்களால் அழைக்கப்பட்டுவருகிறார். மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ்வும் தற்போது இதுபோல விளையாடிவந்தாலும் அவருக்கு முன்பிருந்தே  தினேஷ் கார்க்திக்  இந்த பாணியைத் தொடர்ந்துவருகிறார்.


மேலும் படிக்க | 'KGF'- ல நம்ம தினேஷ் கார்த்திக்கா?! - நெட்டிசன்ஸின் வேற லெவல் கண்டுபிடிப்பு!


இந்நிலையில், இந்தியன் 360 தினேஷ் கார்த்திக்குக்கு இண்டர்நேசனல் அளவில் ‘மிஸ்டர் 360’ என அழைக்கப்படும் டி வில்லியர்ஸிடமிருந்து வாழ்த்து மழை பொழிந்துள்ளது.  நடப்பு ஐபிஎல் சீசனில் கார்த்திக்கின் ஆட்டம் தன்னை திக்குமுக்காட வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ள டிவில்லியர்ஸ், தினேஷ் கார்த்திக்கிடமிருந்து இப்படி ஒரு ஆட்டத்தைத் தான் எதிர்பார்க்கவேயில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.


                                                           


தினேஷ் கார்த்திக்கின் ஆட்டத்தைப் பார்க்கும்போது தனக்கே மீண்டும் கிரிக்கெட்டுக்குத் திரும்பி சில காலம் விளையாடவேண்டும் என நினைக்கத் தோன்றுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பெங்களூர் அணியில் இருந்துவந்த ஏபி டி வில்லியர்ஸ் கடந்த சீசனுடன் ஒட்டுமொத்தக் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வுபெற்றார். இந்நிலையில் டி வில்லியர்ஸின் இப்பேச்சால் உற்சாகம் அடைந்துள்ள ரசிகர்கள், மீண்டும் அவர் வந்தால் கிரிக்கெட் உலகம் களைகட்டும் எனக் கூறிவருகின்றனர்.


மேலும் படிக்க | என்னை தோக்கடிக்க ஒருத்தன் மட்டும் வருவானே.. அவனும் இங்க நான்தானே! என்ன சொல்றார் ஹிட்மேன்?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR