என்னை தோக்கடிக்க ஒருத்தன் மட்டும் வருவானே.. அவனும் இங்க நான்தானே! என்ன சொல்றார் ஹிட்மேன்?

நடப்பு ஐபிஎல்லில் மும்பை அணி தொடர் தோல்வியைச் சந்தித்துவருகிற நிலையில், கேப்டன் ரோகித் சர்மா இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 17, 2022, 05:27 PM IST
  • நடப்பு ஐபிஎல்லில் மும்பை அணி தொடர் தோல்வியைச் சந்தித்துவருகிறது
  • கேப்டன் ரோகித் சர்மாவும் பெரிதாகச் சோபிக்கவில்லை
  • மும்பையின் தோல்வி பற்றி ரோகித் சர்மா பேச்சு
என்னை தோக்கடிக்க ஒருத்தன் மட்டும் வருவானே.. அவனும் இங்க நான்தானே! என்ன சொல்றார் ஹிட்மேன்? title=

ஐபிஎல்லின் பெரிய தலைக்கட்டாகப் பார்க்கப்படும் அணி மும்பை இந்தியன்ஸ். இதுவரை 5 முறை சாம்பியனாகியுள்ள அந்த அணி ஐபிஎல்லில் அதிக முறை சாம்பியன் பெற்ற அணியாகவும் விளங்கிவருகிறது.

இதனால் இம்முறையும் அந்த அணிமீது பெரும் எதிர்பார்ப்பு இருந்துவருகிறது. ஆனால், மும்பை இந்தியன்ஸோ நடப்பு ஐபிஎல்லில் தொடர்ந்து சொதப்பிவருகிறது. சென்னையும் மும்பையும் தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோற்று ‘நண்பேன்டா’ மோடில் இருந்துவந்தன. இதனிடையே தனது 5ஆவது போட்டியில் சென்னை அணி வென்றதால் மும்பை அணி தற்போது ‘தனிமரம்’ ஆகியுள்ளது.

மும்பை அணி 5ஆவது போட்டியில் தோற்றது மட்டுமல்லாமல் லக்னோ அணிக்கு எதிரான 6ஆவது போட்டியிலும் தோற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. மும்பை அணிதான் இப்படி என்றால் அதிக முறை கோப்பை வென்ற கேப்டன்- ஐபிஎல்லில் அதிக ரன்கள் அடித்துள்ள 3ஆவது வீரர்- அதிக சிக்ஸர்கள் அடித்துள்ள முதல் இந்திய வீரர் என ஏராளமான சாதனைகளுக்குச் சொந்தக்காரரான மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் ஃபார்மும் இம்முறை அவ்வளவு சிறப்பாக இல்லை.

Rohit sharma

6 போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா மொத்தமாகவே 114 ரன்கள் தான் இதுவரை அடித்துள்ளார். இப்படியான தொடர் தோல்வியால் மும்பை அணி பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது. இந்நிலையில் லக்னோ அணிக்கு எதிரான தோல்விக்குப் பிறகு பேசியுள்ள மும்பை கேப்டன் ரோகித் சர்மா, அணியில் என்ன தவறு நடக்கிறது எனத் தெரிந்தால் அதை மாற்றிக்கொள்ளலாம் ஆனால் என்ன நடக்கிறது என்றே புரிந்துகொள்ளமுடியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | ராகுலின் அதிரடியில் இரண்டாவது ஹாட்ரிக் தோல்வியை சந்தித்த மும்பை!

‘எப்போதும் எப்படித் தயார் ஆவேனோ அதுபோலத்தான் தற்போதும் செய்கிறேன் ஆனால் சிறப்பாக அமையவில்லை’ எனத் தெரிவித்துள்ள அவர், அணியின் இந்தத் தொடர் தோல்விக்கு தானே முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் இந்தத் தொடரில் ‘கம்பேக்’ கொடுத்து மீண்டும் வெற்றி பெறுவோம் எனவும் ரோகித் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார். அணி வெற்றிபெற்றால் அதில் தனக்குப் பங்கு கோருவதும் அணி தோல்வி கண்டால் அதற்கு மற்றவர்களைக் கைகாட்டுவதுமாக இருந்துவரும் சில கேப்டன்கள் மத்தியில் தோல்விக்குப் பொறுப்பேற்க முன்வந்துள்ள ரோகித் சர்மாவின் செயலைப் பலர் பாராட்டியும் வருகின்றனர்.

மேலும் படிக்க  | மும்பை இந்தியன்ஸ் பற்றி சச்சின் தெண்டுல்கர் மகள் கூறியது இதுதான்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News