இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் Sledging செய்வார்கள்
IND vs Aus: ஆஸ்திரேலியா தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் ((Justin Langer), `ஆஸ்திரேலிய வீரர்கள் தவறான வார்த்தைகளை பயன்படுத்த மாட்டார்கள், ஆனால் நகைச்சுவையாக பேசுவதை பார்க்க முடியும்` என்று கூறுகிறார்...
புதுடெல்லி: இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான போட்டிகள் எப்போதுமே கடுமையானதாக இருக்கும். போட்டியை வெல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில், வீரர்ளிடையே உரசல்கள் ஏற்படுவதையும் பல முறை பார்க்கமுடிகிறது. இந்தியாவின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திலும் இதுபோன்ற உரசல்களும், பிணக்குகளும் இருக்குமா?
இந்த முறை இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஆக்ரோஷமாக இருப்பார்கள், ஆனால் தவறான வார்த்தைகள் பயன்படுத்தப்பட மாட்டோம் என்று ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் ((Justin Langer) கூறுகிறார். ஆனால் கிரிக்கெட் களத்தில், காமெடியையும் காணலாம் என்று அவர் உறுதியளிக்கிறார்.
கடந்த சில ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கவில்லை, நம்பர் ஒன் என்ற இடத்தை விட்டுக் கொடுத்தது பற்றி லாங்கரிடம் கேள்வி கேட்கப்பட்டது.
இந்த கேள்விக்கு பதிலளித்த ஜஸ்டின் லாங்கர், 'முதலில் ஆஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வருவதைப் பற்றி பலரும் பயந்தார்கள் என்று நினைக்கிறேன், ஏனெனில் அவர்கள் சிறந்த வீரர்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதற்காகத் தான் அவர்கள் பயந்தார்கள். நையாண்டி பேச்சுக்காக அல்ல. க்ளென் மெக்ராத், ஷேன் வார்ன், ஸ்டீவ் வா, ஆடம் கில்கிறிஸ்ட், ரிக்கி பாண்டிங் (Glenn McGrath, Shane Warne, Steve Waugh, Adam Gilchrist, Ricky Ponting) என கிரிக்கெட் ஜாம்பவான்களை எதிர்கொள்ள வேண்டும் என்பது வீரர்களுகு பதட்டத்தை ஏற்படுத்தும் தானே?’ என்று கேட்டார்.
ஐபிஎல் போன்ற லீக்குகளின் வருகையால் தற்போது நிலைமை மாறிவிட்டது செய்வது கடினம் என்று ஸ்டீவ் ஸ்மித் கூறியிருந்தார். ஒரு தொடரில் உங்கள் எதிர் அணியில் விளையாடும் ஒரு வீரர், அடுத்த சில மாதங்களில் ஐ.பி.எல் லீக்கில் உங்கள் அணியில், உங்களுடன் இணைந்து விளையாடுவார் என்பதால் தற்போது கிரிக்கெட்டில் சுமூகத்தன்மை வந்துவிட்டது என்று அவர் கூறினார்.
ஆஸ்திரேலிய அணியின் சிறந்த ஆட்டக்காரரான லாங்கர், வழக்கமாக பேட்ஸ்மேனுக்கு அருகில் பீல்டிங் செய்பவர்களில் ஒருவராக இருந்தார். 2002 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் 'below-the-belt' என்று திட்டியபோது, அதை கேட்டவர்களில் ஒருவராக இருந்தவர் லாங்கர். அதுபோன்ற வசவையும், நேர்மறையாக எடுத்துக் கொண்ட ஆஸ்திரேலிய அணியின் Steve Waugh, இது வீரர்களுக்கு ஆத்திரம் ஊட்டி, மனோரீதியிலான தாக்குதல் செய்வது என்று கூறி நிலைமையை மோசமாகாமல் பாதுகாத்தார்.
ஆனால் அதன்பிறகு, ஆஸ்திரேலிய அணியின் போக்கிலும் மாற்றங்கள் தென்பட்டன. தென்னாப்பிரிக்காவில், 2018 ஆம் ஆண்டில் பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஸ்மித் மற்றும் வார்னர், கிரிக்கெட் விளையாடுவதற்கு ஒரு வருட தடையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
அதன் பின்னர் விஷயங்கள் மாறிவிட்டன என்று லாங்கர் ஒப்புக்கொண்டார். வரவிருக்கும் தொடரில், ரசிகர்கள் களத்தில் விறுவிறுப்பான விளையாட்டுடன் நகைச்சுவை உணர்வைக் காணமுடியும் அவதூறுகளை அல்ல என்று கூறினார்.
'எல்லா விளையாட்டுகளையும் போல ஆக்ரோஷமாக விளையாடுவோம், ஆனால் முறைகேடுகள் இருக்காது. கடைசியாக இந்தியா ஆஸ்திரேலியாவுக்குச் சென்றபோது, அதற்கான பல உதாரணங்கள் இருந்ததை சுட்டிகாட்ட முடியும். டிம் பெயினின் நகைச்சுவை உணர்வு நன்றாக இருந்தது என்பதை குறிப்பிடலாம் '.
விராட் கோலி களத்தில் எப்படி நடந்துகொள்ளும் என்பதை தனது அணி பொருட்படுத்தாது என்று ஜஸ்டின் லாங்கர் கூறினார்.
36 வயதான ரோஸ் டெய்லர் (Ross Taylor) இந்தியாவில் நடைபெறவிருக்கும் 2023 உலகக் கோப்பைக்கான திட்டத்தை உருவாக்கினார்
'விராட் செய்வதை நாங்கள் விரும்புகிறோம். கடைசியாக விளையாடியபோது நகைச்சுவை உணர்வுடன் இயல்பாக இருந்தோம். நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், களத்தில் உள்ள அழுத்தத்திற்கும் பேசப்படும் வார்த்தைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நீங்கள் யாருக்கு எதிராக விளையாடுகிறீர்கள் என்பதைப் பொறுத்தது தான் விளையாட்டு' என்று ரோஸ் டெய்லர் (Ross Taylor) கூறுகிறார்.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையானசெய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR