India vs Australia: போட்டிகளின் அட்டவணைகள், அணிகளின் விவரம் இதோ…

இந்த ஆண்டு ஜனவரியில் இரு தரப்பினருக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி 2-1 என்ற முறையில் வெற்றி பெற்றது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 22, 2020, 07:18 PM IST
  • நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய அணி சர்வதேச போட்டியில் விளையாடும்.
  • இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மூன்று போட்டிகள் கொண்ட டி 20 தொடர் மற்றும் பல ஒருநாள் போட்டிகளில் நவம்பர் 27 முதல் விளையாடவுள்ளன.
  • அணியில் இடம்பெறும் வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.
India vs Australia: போட்டிகளின் அட்டவணைகள், அணிகளின் விவரம் இதோ… title=

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக ஏறக்குறைய ஒன்பது மாதங்கள் போட்டிகளிலிருந்து விலகி இருந்த பின்னர், இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி சர்வதேச கிரிக்கெட்டை மீண்டும் தொடங்க உள்ளது.

மார்ச் மாதத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் COVID-19 தொற்றால் நிறுத்தப்பட்டது.

மறுபுறம், செப்டம்பர் மாதத்தில், ஆஸ்திரேலியா (Australia), இங்கிலாந்துக்கு எதிராக, மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் 1-2 என்ற முறையில் தோல்வியையும், ஒரு நாள் போட்டித்தொடரில் 2-1 என்ற முறையில் வெற்றியையும் பெற்றது. அதற்குப் பிறகு ஆஸ்திரேலியா பங்குகொள்ளப்போகும் முதல் சர்வதேச போட்டித் தொடராகும் இது.

இந்தியாவும் (India) ஆஸ்திரேலியாவும் மூன்று போட்டிகள் கொண்ட T-20 தொடர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் நவம்பர் 27 ஆம் தேதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் (SCG) விளையாட உள்ளன. இரு தரப்பினரும் டிசம்பர் 17 ஆம் தேதி அடிலெய்ட் ஓவலில் தொடங்கி நான்கு டெஸ்ட் போட்டிகளைக் (Test Matches) கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபிக்காக மோதுவார்கள்.

விராட் கோலியின் தலைமையின் கீழ், 2018-19ல் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்த முதல் ஆசிய அணியாக இந்தியா ஆனது.

இதற்கிடையில், இந்த ஆண்டு ஜனவரியில் இரு தரப்பினருக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி 2-1 என்ற முறையில் வெற்றி பெற்றது.

மறுபுறம், ஆஸ்திரேலியா கடந்த முறையை விட கண்டிப்பாக சிறந்த ஏற்பாட்டுடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் கோஹ்லி தலைமையிலான அணிக்கு எதிரான தொடரை தங்கள் நாட்டில் கைப்பற்ற அந்த அணி ஆர்வமாக இருக்கும். தங்களது முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் முன்னாள் துணை கேப்டன் டேவிட் வார்னர் திரும்பி வருவதால், ஆஸ்திரேலிய அணி நம்பிக்கையுடன் இருக்கும்.

ஆஸ்திரேலியா 2020 க்கான இந்தியாவின் சுற்றுப்பயணத்தைப் பற்றிய முக்கிய தகவல்கள் இதோ:

ஒருநாள் போட்டிகள்

நவம்பர் 27: இந்தியா vs ஆஸ்திரேலியா முதல் ODI, சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும், நேரம் 9:10 AM IST

நவம்பர் 29: இந்தியா vs ஆஸ்திரேலியா இரண்டாவது ODI, சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும், நேரம் 9:10 AM IST

டிசம்பர் 2: இந்தியா vs ஆஸ்திரேலியா மூன்றாவது ODI, கேன்பெராவில் மனுகா ஓவல் மைதானத்தில் நடைபெறும், நேரம் 9:10 AM IST

T-20 போட்டிகள்

டிசம்பர் 4: இந்தியா vs ஆஸ்திரேலியா முதல் T20, கேன்பெராவில் மனுகா ஓவல் மைதானத்தில் நடைபெறும், நேரம் 1:40 PM IST

டிசம்பர் 6: இந்தியா vs ஆஸ்திரேலியா இரண்டாவது T20, சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும், நேரம் 1:40 PM IST

டிசம்பர் 8: இந்தியா vs ஆஸ்திரேலியா மூன்றாவது T20, சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும், நேரம் 1:40 PM IST

டெஸ்ட் போட்டிகள்

டிசம்பர் 17-21: அடிலெய்ட் ஓவலில் இந்தியா vs ஆஸ்திரேலியா 1 வது டெஸ்ட் நடைபெறும், நேரம் காலை 9:30 மணி

டிசம்பர் 26-30: மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா vs ஆஸ்திரேலியா 2 வது டெஸ்ட், நேரம் காலை 9:30 மணி.

ஜனவரி 7-11: இந்தியா Vs ஆஸ்திரேலியா 3 வது டெஸ்ட், சிட்னி கிரிக்கெட் மைதானம் நேரம் 9:30 AM IST

ஜனவரி 15-19: பிரிஸ்பேனில் உள்ள கப்பாவில் இந்தியா vs ஆஸ்திரேலியா 4 வது டெஸ்ட், 9: 30 AM IST

அணிகள்:

இந்தியா

இந்தியா ஒருநாள் அணி: விராட் கோஹ்லி (கேப்டன்), ஷிகர் தவன், சுப்மான் கில், கே.எல்.ராகுல் (துணை கேப்டன் & விக்கெட் கீப்பர்), ஸ்ரேயஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ஹார்திக் பாண்ட்யா, மயங்க் அகர்வால், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் பும்ரா, மொஹமத் ஷமி, நவ்தீப் சைனி, ஷார்துல் தாக்கூர், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்).

இந்தியா T20 அணி: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல் (துணை கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ஹார்திக் பாண்ட்யா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திரா சாஹல், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, தீபக் சாஹர், டி நடராஜன்.

இந்தியா டெஸ்ட் அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால், பிருத்வி ஷா, கே.எல்.ராகுல், ஜிதேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, சுப்மான் கில், விருத்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஜஸ்பிரீத் பும்ரா, மொஹமத் ஷமி, உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஸ்வின், மொஹமத் சிராஜ்.

ALSO READ: ICC டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவை இரண்டாம் இடத்திற்கு தள்ளிய கொரோனா

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா ஒருநாள் அணி: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), சீன் அபோட், ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், மார்னஸ் லாபூசாக்னே, க்ளென் மேக்ஸ்வெல், டேனியல் சாம்ஸ், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யு வேட் (விக்கெட் கீப்பர்), டேவிட் வார்னர், ஆடம் சம்பா.

ஆஸ்திரேலியா டி 20 அணி: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), சீன் அபோட், ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், மார்னஸ் லாபூசாக்னே, க்ளென் மேக்ஸ்வெல், டேனியல் சாம்ஸ், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யு வேட் (விக்கெட் கீப்பர்), டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா.

ஆஸ்திரேலியா டெஸ்ட் அணி: டிம் பெயின் (கேப்டன், விக்கெட் கீப்பர்), சீன் அபோட், ஜோ பர்ன்ஸ், பாட் கம்மின்ஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், மைக்கேல் நேசர், ஜேம்ஸ் பாட்டின்சன், வில் புகோவ்ஸ்கி, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன், மத்தேயு வேட், டேவிட் வார்னர்.

இரு தரப்பினருக்கும் இடையிலான தொடர் இந்தியாவில் சோனி நெட்வொர்க்கில் ஒளிபரப்பப்படும். அதே நேரத்தில் நிகழ்வின் நேரடி ஸ்ட்ரீமிங் சோனி லைவில் கிடைக்கும்.

ALSO READ: paternity leave நிராகரிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் பற்றித் தெரியுமா?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News