இந்த ஐபிஎல் போட்டியில் உட்சகட்ட பார்மில் இருக்கிறார் ஜாஸ் பட்லர். முதல் போட்டியில் இருந்தே வாணவேடிக்கைகளை காட்டும் அவர், டெல்லி அணிக்கு எதிரான போட்டியிலும் தொடர்ந்தார். டாஸ் வெற்றி பெற்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பன்ட், ஏன்டா டாஸ் வெற்றி பெற்று பவுலிங் எடுத்தோம்? என நினைக்கும் அளவுக்கு அவரின் ஆட்டம் இருந்தது. டெல்லி பவுலர்களின் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய பட்லர், வாண வேடிக்கைகளை காட்டவும் தவறவில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | Mukesh Chaudhary: யார் இந்த முகேஷ் சவுத்ரி? அவரை தயார்படுத்திய தோனி!


போட்டி தொடங்கியதும் ஸ்லோவாக ஆரம்பித்த ஆட்டம், படிப்படியாக ஜெட் வேகத்தில் சென்றது. 65 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட பட்லர் 116 ரன்கள் விளாசினார். இதில் 9 மெகா சிக்சர்களும், 9 பவுண்டரிகளும் அடங்கும். குல்தீப் யாதவ் ஓவரில் 105 மீட்டருக்கு சிக்சர் பறக்க விட்டார். இது என்ன தூரம்? இதற்கு மேலும் அடிக்க முடியும் என சொல்லி அடிப்பதுபோல அடுத்த சிக்சர் இதைவிட அதிக தூரம் விளாசினார். ஷர்துல் தாக்கூர் வீசிய ஓவரில் 107 மீட்டர் விளாசி அனைவரையும் அசர வைத்தார்.



இந்த ஐபிஎல் போட்டியைப் பொறுத்தவரை ஜாஸ் த பாஸ் என்றே சொல்லலாம். அதிக ரன்கள், அதிக சிக்சர்கள், அதிக பவுண்டரிகள் மற்றும் அதிக சதம் விளாசியவர் என அனைத்திலும் பட்லரே முதல் இடத்தில் இருக்கிறார். இந்த ஐபிஎல் போட்டியிலும் மட்டும் இதுவரை 3 சதங்களை விளாசியிருக்கும் பட்லர், ஒட்டுமொத்தமாக ஐபிஎல் வரலாற்றில் 4 சதங்களை பதிவு செய்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் 400 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையும் அவர் வசமே இருக்கிறது. இதனால், நிர்ணயிக்கபட்ட 20 ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 2 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்களை குவித்தது. கேப்டன் சஞ்சு சாம்சன் 19 பந்துகளில் 46 ரன்கள் குவித்தார். 


மேலும் படிக்க | இர்பான் பதானுக்கு பதிலடி கொடுத்த அமித் மிஸ்ரா


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR