புது டெல்லி: ஐபிஎல் 2022 தொடரில் நேற்று இரவு நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் லீக் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய முகேஷ் சவுத்ரி அனைவரின் கவனத்தை தன் பக்கம் திருப்பியுள்ளார். ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பு பஞ்சாப் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக பந்து வீசிய போது முகேஷ் சவுத்ரி அனைவரின் கோவத்திற்கு ஆளானார். அதற்கு காரணம் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நான்கு ஓவர்களில் 40 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் மட்டும் வீழ்த்தினார் மற்றும் அந்தப் போட்டியில் பல கேட்சுகளையும் தவறவிட்டார். அதன் பின்னர், பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக விக்கெட் எடுக்காமல் 52 ரன்களை விட்டுக்கொடுத்தார். முகேஷ் சவுத்ரி மீதான நம்பிக்கை உடைந்தது. அடுத்த ஆட்டத்தில் ஆடுவாரா என்ற கேள்வியும் எழுந்தது.
முகேஷ் சவுத்ரி மீது CSK வைத்த நம்பிக்கை
ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அவரின் குறைவான செயல்திறனை மீறி முகேஷ் சவுத்ரி மீது நம்பிக்கை வைத்தது, மீண்டும் வாய்ப்பு வழங்கியது. நேற்று டி. ஒய். பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக அவரின் பர்பாமன்ஸ் அவர் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அணியின் வெற்றியில் முக்கியப்பங்கு
ஐபிஎல் 2022 தொடரின் 33வது போட்டியில் மும்பைக்கு எதிராக அவர் மூன்று ஓவர்களில் 19 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டை கைப்பற்றினார். அதுவுக் ரோகித் சர்மா, இஷான் கிஷான், டெவல்ட் ப்ரீவிஸ் ஆகியோருக்கு திரும்பி பெவிலியன் செல்லும் வழியை சவுத்ரி காட்டினார். வியக்க வைக்கும் வகையில் அவரது பந்து வீச்சு இருந்தது. இதுபோன்ற ஒரு செயல்திறனை வெளிப்படுத்த அவருக்கு கால அவகாசம் தேவைப்பட்டாலும், சென்னை அணி நிர்வாகம் அவர் மீது காட்டிய நம்பிக்கையை காப்பாற்றி சென்னை அணி வெற்றி பெறுவதற்கு முக்கியப் பங்காற்றியுள்ளார்.
மேலும் படிக்க: அப்பவே அப்புடி! 2010ல் பொல்லார்ட்டை அவுட் செய்ய தோனி செய்த மேஜிக்
முகேஷ் சவுத்ரி யார்? அவர் எங்கிருந்து வந்தார். எந்த மாநிலத்தை சேர்ந்தவர். இதற்கு முன்பு எந்த அணியில் இருந்தார்? அவரின் கிரிக்கெட் பயணம் என்ன? இப்படி ரசிகர்கள் அவரைக்குறித்து தெரிந்துக்கொள்ள ஆர்வமாக உள்ளனர். வாருங்கள் அவரைப்பற்றி தெரிந்துக்கொள்ளுவோம்.
சிறிய கிராமத்திலிருந்து ஐபிஎல் வரை:
ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தில் உள்ள பர்தோதாஸ் கிராமத்தில் வளர்ந்த முகேஷ் சௌத்ரிக்கு கிரிக்கெட் தான் பிடித்த விளையாட்டாக இருந்தது. முகேஷ் சவுத்ரி CSK டிவியிடம் பேசிய போது, நான் சின்ன பையனாக இருந்தபோது, என்னை விட வயதில் மூத்தவர்கள் என்னை பேட்டிங் செய்யவோ, பந்து வீசவோ அனுமதிக்க மாட்டார்கள், ஆனால் நான் நாள் முழுவதும் பீல்டிங் செய்வேன். எனது கிராமத்தில் கிரிக்கெட் கிளப் அல்லது கிரிக்கெட் பயிற்சி என எதுவும் இல்லை. அதேநேரத்தில் எங்கள் குடும்பமும் ஏழ்மையில் இருந்தது. எனவே என்னால் வெளியே சென்று பயிற்சி எல்லாம் செய்ய முடியாத நிலை. இவை அனைத்தும் எனது பயணம் டென்னிஸ் பந்தில் தொடங்கியது. எனது கிராமத்தில் கல்வி வசதி இல்லாததால், நான்காம் வகுப்பில், என் தந்தை என்னை விடுதியில் சேர்த்தார். அங்கு எனது படிப்பை தொடர்ந்தேன் என்று கூறியுள்ளார்.
கிரிக்கெட்டின் ரகசியம்
புனேவில் உள்ள விடுதி பள்ளியில் 9ம் வகுப்பு படுக்கும் போது கிரிக்கெட் சேர்க்கை நடந்தது. அதில் சேர்ந்தேன். ஆனால் எனது பெற்றோரிடம் கூறவில்லை, அதன்பிறகு கிரிக்கெட்டில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். ஒரு நாள் நாளிதழ்களில் என் பெயர் வந்ததும் எனது பெற்றோரிடம் கூறினேன். அப்போது எனது தந்தை சம்பந்தம் தெரிவித்தார். ஆனால் படிப்பும் முக்கியம். ஏனென்றால் நிறைய பேர் கிரிக்கெட் விளையாடுகிறார்கள் எனக்கூறி நம்பிக்கை தெரிவித்தார் என்றார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நான் ரஞ்சி டிராபியில் (மகாராஷ்டிராவுக்காக) விளையாடினேன். நான் மாநில அளவில் தேர்வாகும் வரை, நான் கிரிக்கெட்டில் தீவிரமாக இருப்பது என் அண்ணனுக்கு மட்டுமே தெரியும் எனவும் கூறினார்.
நம்பிக்கை அளித்த குடும்பத்தினர்
எனது பயணம் கடினமாக இருந்தது, ஆனால் எனது குடும்பத்தினர் எனக்கு முழு நம்பிக்கை அளித்தனர். நான் புனேவில் தனியாக இருந்தபோது, என் சகோதரி எனக்கு மிகவும் பக்கபலமாக இருந்தார். அவர் இல்லாமல் என்னால் எதையும் சிறப்பாக செய்ய முடியாது. நான் செலக்ட் ஆனபோதும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை என்ன செய்ய வேண்டும் என்பதைக் கூறி, நல்லா விளையாட வேண்டும் என நம்பிக்கை அளிப்பார் என்றார்.
முகேஷ் சவுத்ரியை தயார்படுத்திய தோனி
இந்த ஐபிஎல் தான் முகேஷ் சவுத்ரிக்கு முதல் சீசனாக இருந்தாலும், அவர் கடந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் முகாமில் ஒரு பகுதியாக இருந்தார். பேட்ஸ்மேன்களுக்கு நெட் பவுலராக பயிற்சி அளித்து வந்தார். பந்தை இருபுறமும் ஸ்விங் செய்யும் திறமை கொண்ட முகேஷை, புதிய பந்து மற்றும் டெத் ஓவர்கள் என இரண்டிற்கும் தோனி தயார்படுத்தியுள்ளார்.
கிராமத்திற்கு பெருமை சேர்த்த முகேஷ் சவுத்ரி
ஐபிஎல் மெகா ஏலத்தில், இந்த இடது கை வேகப்பந்து வீச்சாளரான சிஎஸ்கே அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. மும்பைக்கு எதிராக முகேஷ் சவுத்ரியின் அட்டகாசமான ஆட்டம் நிச்சயமாக அவரது தந்தைக்கு மற்றும் கிராமத்திற்கு பெருமை சேர்த்திருக்கும்.
மேலும் படிக்க: தோனியின் அதிரடியில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR