இந்தியா பற்றி பொதுவாக டிவிட் பதிவிட்ட இந்திய முன்னாள் வீரரான இர்பான் பதானுக்கு, அமித் மிஸ்ரா பதிலடியாக போட்ட டிவிட் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தலைநகர் டெல்லியில் முஸ்லீம்களின் வீடுகள் குறி வைத்து இடிக்கப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த மக்களுக்கு எந்தவித முன்னெச்சரிக்கையும் கொடுக்காமல், அவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டது அரசியல் தளத்திலும் எதிரொலித்துள்ளது.
My country, my beautiful country, has the potential to be the greatest country on earth.BUT………
— Irfan Pathan (@IrfanPathan) April 21, 2022
ஆக்கிரமிப்புகளை இடிக்க வேண்டும் என்பது குறிகோளாக இருந்தால், முஸ்லீம் வீடுகள் மட்டும் குறி வைக்கப்படுவது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள எதிர்க்கட்சிகள், இதேபோல் மற்ற பகுதிகளில் இருக்கும் வீடுகளை இடிக்கப்படுமா? என்றும் வினவியுள்ளார். இப்பிரச்சனை நாடு முழுவதும் எதிரொலித்திருக்கும் நிலையில், இர்பான் பதான் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ’ என் நாடு... என்னுடைய அழகான நாடு, பூமியில் மிகப்பெரிய நாடாக இருப்பதற்கான வீரியம் கொண்டது. ஆனால்...’ என பதிவிட்டிருந்தார்.
My country, my beautiful country, has the potential to be the greatest country on earth…..only if some people realise that our constitution is the first book to be followed.
— Amit Mishra (@MishiAmit) April 22, 2022
அவருடைய டிவிட்டர் பதிவுக்கு பதில் அளிக்கும் விதமாக டிவிட்டரில் பதிவு போட்டுள்ள அமித் மிஸ்ரா, ‘எனது நாடு, என் அழகான நாடு, பூமியில் சிறந்த நாடாக மாறும் சாத்தியம் உள்ளது. ஆனால், அரசியலமைப்புச் சட்டமே பின்பற்றப்பட வேண்டிய முதல் புத்தகம் என்பதை சிலர் உணர வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார். இந்த பதிவில் இர்பான் பதானை டேக் செய்யவில்லை என்றாலும், அவருடைய டிவிட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் தான் அமித் மிஸ்ரா இந்த பதிவை போட்டுள்ளார் என நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR