மே 2, 2010 அன்று சர்வதேசப் டி20 போட்டியில் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை சுரேஷ் ரெய்னா பெற்றார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2010 டி20 உலகக் கோப்பையில் இந்த சாதனையை  படைத்தார்.  இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டியில் 60 பந்துகளில் 101 ரன்களை விளாசினார். ஒன்பது பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் ரெய்னா தனது சதத்தை பதிவு செய்தார்.  ரெய்னாவுடான் ஜோடி சேர்ந்து விளையாடிய யுவராஜ் சிங் 30 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 37 ரன்கள் எடுத்தார். இருவரும் சேர்ந்து 88 ரன்கள் எடுத்து வலுவான பட்னர்ஷிப்பை கொடுத்தனர்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | IPL2023: பிசிசிஐ கொடுத்த அழுத்தம்.. வழிக்கு வந்த ஐசிசி! மாறும் ஐபிஎல் அட்டவணை


இன்றுவரை, ரோஹித் சர்மா நான்கு டி20 சதங்களை அடித்துள்ளார்.  இந்திய அணிக்காக அதிக டி20 சதங்கள் அடித்த வீரர்கள் இடத்தில் ரோஹித் முதல் இடத்தில் உள்ளார்.  அதே நேரத்தில் KL ராகுல் 2 டி20 சதங்களை அடித்துள்ளார்.  ரெய்னா மிகக் குறுகிய காலத்தில் சிறந்த கிரிக்கெட் வீரராக செயல்பட்டார். 
மேலும் ரெயின் இந்தியன் பிரீமியர் லீக்கில் அதிக ரன் எடுத்தவர் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார்.  கடந்த சீசனில் விளையாடவில்லை, அதற்கு முந்தைய சீசனில் சரியாக விளையாடாத போதிலும் 5வது இடத்தில் உள்ளார் ரெய்னா. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 193 போட்டிகளில் விளையாடி 5,528 ரன்கள் எடுத்துள்ளார்.



கடந்த 2019ம் ஆண்டு தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த பின்னர் ரெய்னாவும் தனது ஓய்வை அறிவித்தார்.  அதன் பிறகு ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வந்த ரெய்னா 2020 ஆண்டு ஐபிஎல் போட்டியில் இருந்து விலகினார். பிறகு 2021ம் ஆண்டு சிஎஸ்கே அணிக்காக விளையாடிய அவரை 2022ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் எந்த ஒரு அணியும் ரெய்னாவை தங்கள் அணியில் எடுக்கவில்லை.  இருப்பினும் இன்னும் ரெய்னா கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவிக்கவில்லை. ஐபிஎல் 2023ம் ஆண்டு மீண்டும் ஐபிஎல் போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க | 20 நிமிடங்கள் போதும்: விராட் கோலிக்காக பேசிய முன்னாள் இந்திய வீரர்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ