பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், விராட் கோலியின் பார்ம் குறித்து பேசியுள்ளார். மேலும் அவருக்கு உதவ தயாராக இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார். விராட் கோலிக்கு பார்ம் குறித்து அவருக்கே பல சந்தேகங்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார். இங்கிலாந்தில் இந்தியா 2-1 ஒருநாள் போட்டித் தொடரையும், 2-1 என்று டி20 தொடரையும் வென்றது. இந்நிலையில் விராட் கோலியின் பார்ம் குறித்து சுனில் கவாஸ்கர் ஒரு நேர்காணலில் பேசியுள்ளார். விராட் கோலியுடன் 20 நிமிடங்கள் பேச வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார். ஆஃப்-ஸ்டம்புக்கு வெளியே வரும் பந்துகள் விராட் கோலியை தொந்தரவு செய்வதாகவும், ஃபார்முக்கு திரும்புவதை தடுப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.
மேலும் படிக்க | Ben Stokes: பென் ஸ்டோக்ஸ் திடீர் ஓய்வு- உலக்கோப்பை நாயகனின் உருக்கமான அறிவிப்பு
கோஹ்லி தனது கிரிக்கெட் வாழ்க்கையின் மிகவும் மோசமான ஒரு கட்டத்தில் உள்ள இந்த சமயத்தில் கவாஸ்கர் அவருக்கு ஆதரவாக பேசியுள்ளார். சமீபத்தில் முடிவடைந்த ஒருநாள் தொடரில் 2 ஒருநாள் போட்டிகளில் வெறும் 33 ரன்களையும், 2 டி20 போட்டிகளில் 12 ரன்களையும் மட்டுமே எடுத்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பர்மிங்காம் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்விவை சந்தித்தது. இந்த டெஸ்டில் கோலி 2 இன்னிங்ஸ்களில் 31 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. "நான் அவருடன் சுமார் 20 நிமிடங்கள் இருந்தால், அவர் செய்ய வேண்டிய விஷயங்களை என்னால் அவரிடம் சொல்ல முடியும். அது அவருக்கு உதவக்கூடும், அது அவருக்கு நிச்சயமாக உதவும் என்று நான் கூறவில்லை, அந்த ஆஃப்-ஸ்டம்பைப் நோக்கி வரும் பந்துகள் குறித்து உதவ முடியும்.
"ஓப்பனிங் பேட்டராக இருந்து இதே பிரச்சனையை நான் சந்தித்ததால் அவருக்கு சில உதவிகள் செய்ய முடியும். கோலி நிச்சயம் தனது பழைய பார்மிற்கு திரும்பி வருவார். நான் சொன்னது போல், அவருக்கு சில தோல்விகள் பாடத்தை கற்று கொடுத்துள்ளன. இந்தியாவுக்கான அவரது சாதனை மிக பெரியது. இதுவரை 70 சர்வதேச சதங்களைப் அடித்துள்ளார். கோலி பொறுமையுடன் இருக்க வேண்டும், இந்திய கிரிக்கெட்டுக்கு சேவையாற்றிய இந்த ஜாம்பவான்க்கு ஒரு சில தோல்விகளை அனுமதிக்கலாம்" என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.
ஜூலை 22ம் தேதி தொடங்கும் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 அணியில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. அங்கு இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டு, இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் ஆசியக் கோப்பை டி20க்கு மட்டுமே அவர் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | IPL2023: பிசிசிஐ கொடுத்த அழுத்தம்.. வழிக்கு வந்த ஐசிசி! மாறும் ஐபிஎல் அட்டவணை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ