மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக போட்டியின் போது ஏற்பட்ட காயத்தால் தீபக் சாஹர் தற்போது ஓய்வில் உள்ளார்.  இதனால் ஐபிஎல்லின் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், 2022 சீசனில் பெரும் சிக்கலில் உள்ளது. காயம் காரணமாக தீபக் சாஹர் ஐபிஎல்-ல் விளையாடுவது சந்தேகத்தில் உள்ளது.  அப்படி விளையாடினாலும் பாதிக்கும் மேல் போட்டிகளில் களம் இறங்க வாய்ப்பு குறைவாகவே உள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | IPL 2022 முதல் கட்ட போட்டிகளில் 25 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி


பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் முடிவிற்காக சூப்பர் கிங்ஸ் அணி காத்திருக்கிறது. அங்கு சாஹர் தற்போது புனர்வாழ்வு பெற்று வருகிறார். 29 வயதான சாஹரை, 2022 ஐபிஎல் ஏலத்தில் சூப்பர் கிங்ஸ் அணி 14 கோடி ரூபாய்க்கு வாங்கியது.   இந்த ஆண்டு ஏலத்தில் அதிக விலைக்கு போன இரண்டாவது மிக விலையுயர்ந்த வீரரும் இவரே. பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் கலக்குவதால் இவருக்கு ஏலத்தில் கடும் போட்டி நிலவியது.  தனது கடைசி மூன்று ஒருநாள் போட்டிகளில், சாஹர் 69* (இலங்கைக்கு எதிராக), 54 (தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக) மற்றும் 38 (வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக) ரன்கள் அடித்தார்.



சாஹர் 2018 முதல் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.  2018 மெகா ஏலத்தில், சூப்பர் கிங்ஸ் அவரை 80 லட்ச ரூபாய்க்கு வாங்கியது. ஆனால் 2022 ஏலத்திற்கு முன்பு அவரை சி.எஸ்.கே தக்கவைக்கவில்லை. இருப்பினும், சூப்பர் கிங்ஸ் சாஹரை 14 கோடிக்கு வாங்கியது.   சென்னை சூப்பர் கிங்ஸ் எந்த ஒரு ஏலத்திலும் 10 கோடி ரூபாய்க்கு மேல் ஒரு வீரரை வாங்கியது இதுவே முதல் முறை.


லீக் ஆட்டங்கள் நடைபெறவுள்ள மும்பை மற்றும் புனேயில் உள்ள சூழ்நிலைக்கு பழகிக் கொள்ளும் விதமாக, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா எல்லையில் உள்ள சூரத்தில் தற்போது சென்னை அணி முகாம்யிட்டுள்ளது. ஐபிஎல் நிர்வாகம் இன்னும் போட்டி அட்டவணையை வெளியிடவில்லை, 2021ல் வெற்றியாளராக இருப்பதால், சூப்பர் கிங்ஸ் முதல் போட்டியில் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க | கேப்டனை அறிவிப்பதில் RCB-க்கு இவ்வளவு தாமதம் ஏன்?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR