IPL 2022 முதல் கட்ட போட்டிகளில் 25 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி

ஐபிஎல் போட்டிகளுடன தொடர்புடைய அனைத்து பங்கேற்பாளர்களும்/பணியாளர்களும் போட்டியின் முழு நேரத்திலும், மூன்று-ஐந்து நாட்களுக்கு ஒருமுறை RT PCR சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 3, 2022, 06:21 AM IST
  • ஐபிஎல் போட்டிகளுடன தொடர்புடையவர்களுக்கு 3-5 நாட்களுக்கு ஒருமுறை RT PCR சோதனை
  • ஐபிஎல் முதல் கட்டத்திற்கு 25 சதவீதம் பார்வையாளர்கள் அனுமதி
  • இரண்டாம் கட்டத்தில் பார்வையாளர்களை அதிகரிப்பதற்கான முடிவு பின்னர் எடுக்கப்படும்
IPL 2022 முதல் கட்ட போட்டிகளில் 25 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி   title=

புதுடெல்லி: பிசிசிஐ மற்றும் மகாராஷ்டிரா அரசு இடையே நடந்த கூட்டத்திற்குப் பிறகு, ஐபிஎல் முதல் கட்டத்திற்கு 25 சதவீதம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

“கோவிட் சூழ்நிலையைப் பொறுத்து, இரண்டாம் கட்டத்தில் பார்வையாளர்களை அதிகரிப்பதற்கான முடிவு பின்னர் எடுக்கப்படும்,” என்று தெரியவந்துள்ளது.

10 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் போட்டியை சுமூகமாக நடத்துவதற்காக  புதன்கிழமை பிசிசிஐ மற்றும் மும்பை கிரிக்கெட் சங்கத்துடன் (Mumbai Cricket Association) மகாராஷ்டிரா அரசு கலந்தாலோசனை நடத்தியது.

மேலும் படிக்க | IPL 2022: கொரோனாவும் ஐபிஎல்லும்! பிசிசிஐயின் PLAN B

மாநில அரசின் அமைச்சர்கள் - ஆதித்யா தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே - எம்சிஏ தலைவர் விஜய் பாட்டீல் மற்றும் கவுன்சில் உறுப்பினர்கள் அஜிங்க்யா நாயக் மற்றும் அபய் ஹடப், பொருளாளர் ஜகதீஷ் அச்ரேக்கர் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

“ஐபிஎல் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, அமைச்சர் மைக்நாத்ஷிண்டே ஜியும் நானும் ஐபிஎல், பிசிசிஐ , போலீஸ் மற்றும் மும்பை மாநகராட்சி அதிகாரிகளுடன் கூட்டுக் கூட்டத்தை நடத்தினோம்.” என்று கூட்டத்திற்குப் பின்,ஆதித்யா தாக்கரே பதிவிட்ட தொடர்ச்சியான ட்வீட்களில் தெரிவித்தார்.

ஐபிஎல் போட்டிகள் நடைபெற திட்டமிடப்பட்டிருக்கும் புனேயிலும்விரைவில் இதேபோன்ற கூட்டத்தை நடத்துவார் என்றும் அவர் கூறினார்.

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகனான ஆதித்யா கூறுகையில், "புனேவைப் பொறுத்தவரை, கூட்டம் விரைவில் நடைபெறும், டிசிஎம் சார் தலைமையில் எங்கள் நகரத்தின் அனைத்து மைதானங்களிலும் போட்டி நடைபெறுவதை உறுதிசெய்ய முன்மொழியப்பட்டது.

மேலும் படிக்க | ஐபில் தொடரில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் DGP மருமகன்

“மகாராஷ்டிராவிற்கு வரும் ஐபிஎல் விளையாட்டுகள் வெளிநாடுகளில் விளையாடப்படாமல் இருப்பதை உறுதி செய்கிறது. இது நாட்டிற்கும், மகாராஷ்டிராவிற்கும் பொருளாதாரம், மன உறுதி மற்றும் கிரிக்கெட் ரசிகர்களின் ஆர்வத்திற்கு மிகப்பெரிய ஊக்கமாகும்.

பங்கேற்பாளர்கள் அனைவரும் மும்பைக்கு வருவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு ஆர்டி-பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதும் புரிந்து கொள்ளப்படுகிறது.

வீரர்கள் அந்தந்த குமிழிகளுக்குள் நுழைவதற்கு முன்பு 3-5 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | சோஷியல் மீடியாவில் பாப்புலரான டாப் 3 ஐபிஎல் அணிகள்

தனிமையில் இருக்கும்போது, போட்டியில் பங்கேற்கும் கிரிக்கெட்டர்கள் RT PCR சோதனையை மூன்று முறை மேற்கொள்வார்கள், முதல் நாள் முதல், இரண்டாவது சோதனை மூன்றாவது நாள் மற்றும் இறுதி சோதனை ஐந்தாவது நாள் நடைபெறும்.

மூன்று நாள் தனிமையில் இருந்தால், தினசரி பரிசோதனைகள் நடைபெறும். மூன்று முடிவுகளும் எதிர்மறையாக இருந்தால், அவர்கள் தனிமைப்படுத்தலில் இருந்து வெளியேறவும் குழுவின் நடவடிக்கைகளைத் தொடங்கவும் அனுமதிக்கப்படுவார்கள்.

ஐபிஎல் போட்டிகளுடன தொடர்புடைய அனைத்து பங்கேற்பாளர்களும்/பணியாளர்களும் போட்டியின் முழு நேரத்திலும், மூன்று-ஐந்து நாட்களுக்கு ஒருமுறை RT PCR சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

மேலும் படிக்க | IPL2022: சோஷியல் மீடியாவில் பாப்புலரான டாப் 3 ஐபிஎல் அணிகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News