2011 ஆம் ஆண்டு இதே நாளில்: சிஎஸ்கே கோப்பை வென்ற சுவாரஸ்ய கதை!
2011ம் ஆண்டு இதே நாளில் சென்னை அணி தனது இரண்டாவது ஐபிஎல் கோப்பையை வென்றது.
இதுவரை நடந்த இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை அணி ஐந்து முறை பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ள நிலையில், தோனி தலைமையிலான சென்னை அணி நான்கு கோப்பைகளை வென்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை ஒன்பது இறுதிப் போட்டிகளில் பங்கேற்று நான்கு முறை பட்டத்தை வென்றுள்ளது. 28 மே 2011 அன்று, சென்னையில் உள்ள சேப்பாக்கின் MA சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான மாபெரும் வெற்றியை பெற்று ஐபிஎல் கோப்பையை தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்றது.
மேலும் படிக்க | வருங்கால அம்பயர்கள்.. சைமன் டஃபல் கணித்துள்ள இந்திய வீரர்கள் யார் யார்?
இந்த போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் எம்எஸ் தோனி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். தொடக்க ஜோடியான மைக்கேல் ஹஸ்ஸி மற்றும் முரளி விஜய் 159 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அடித்து சாதனை படைத்தது. ஹஸ்ஸி 45 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உட்பட 63 ரன்கள் எடுத்தார், விஜய் 52 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் ஆறு சிக்சர்கள் உடன் 95 ரன்கள் எடுத்தார். 3வது இடத்தில் இறங்கிய தோனி 13 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்தார். சிஎஸ்கே 206 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்தது. ஆர்சிபி தரப்பில் ஸ்ரீநாத் அரவிந்த், கிறிஸ் கெயில் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பதிலுக்கு, விராட் கோலி, கிறிஸ் கெய்ல் மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோரின் பெங்களூர் பேட்டிங் லைனப்பை ரவிச்சந்திரன் அஸ்வின் நிலைகுலைய செய்தார். முதல் மூன்று ஓவர்களிலேயே இரு தொடக்க ஆட்டக்காரர்களையும் இழந்தனர். அவர்களுக்குப் பிறகு, கோஹ்லி சில நிமிடங்கள் நம்பிக்கையைத் தூண்டினார், கோஹ்லி 35 ரன்கள் எடுத்த பிறகு பெவிலியன் திரும்ப வேண்டியதாயிற்று. கோஹ்லி ஆட்டமிழந்த பிறகு, சவுரப் திவாரியைத் தவிர வேறு எந்த வீரரும் நீண்ட நேரம் கிரீஸில் நிலைத்திருக்க முடியவில்லை. திவாரி 34 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார், சென்னை தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், ஷதாப் ஜகாதி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பெங்களூரு 20 ஓவர்களில் மிகப்பெரிய இலக்கை எட்டுவதற்கு 58 ரன்கள் பின்தங்கியது, மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் தனது தொடர்ச்சியான இரண்டாவது ஐபிஎல் பட்டத்தை தனது சொந்த மண்ணில் வென்றது. முதல் இன்னிங்ஸில் அசத்தலான ஆட்டத்தைத் தொடர்ந்து, முரளி விஜய் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும் படிக்க | ஐபிஎல் 2022: நடத்தை விதிமீறிய தினேஷ் கார்த்திக் - களமிறங்குவதில் சிக்கல்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR