ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகள் ஐபிஎல் 2022-ன் குவாலிபையரில் மோதுகின்றன. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறும் இப்போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் குஜராத் அணியுடன் மோத உள்ளது. இந்நிலையில், பெங்களுரு அணிக்கு பின்னடைவாக தினேஷ் கார்த்திக், ஐபிஎல் நடத்தை விதிமுறைகள் மீறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | மைதானத்தில் புகுந்த ரசிகரை தூக்கிய பாகுபலி போலீஸ் - கோலியின் WWE ரியாக்ஷன்
லக்னோ அணிக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் அவர் நடத்தை விதிமுறைகளை மீறியதாக புகார் எழுந்துள்ளது. ஐபிஎல் விதிமுறைகளின்படி லெவல் 1 குற்றத்தை அவர் செய்துள்ளதாகவும், தினேஷ் கார்திக்கும் ஒப்புக்கொண்டுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த விதிமுறை மீறலுக்கு போட்டி நடுவர் எடுக்கும் முடிவுக்கு தினேஷ் கார்த்திக் கட்டுப்பட வேண்டும். அதேநேரத்தில் இதுவரை தினேஷ் கார்த்திக்கிற்கான தண்டனை விவரம் அறிவிக்கப்படவில்லை. இதனால், குவாலிஃபையர் போட்டியில் அவர் விளையாடுவதில் எந்த சிக்கலும் இல்லை.
மும்பை இந்தியன்ஸ் அணியின் தயவால் குவாலிபையருக்கு முன்னேறிய பெங்களுரு அணி, முதல் போட்டியில் லக்னோ அணியை எதிர்கொண்டது. அப்போட்டியில் லக்னோ அணியின் மோசமான பீல்டிங் மற்றும் பந்துவீச்சு பெங்களுக்கு சாதகமாக அமைந்தது. படிதார் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் நங்கூரம்போல் கூட்டணி அமைத்து லக்னோ அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். இருவரும் 112 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.படிதார் மாற்று வீரராக பெங்களூரு அணிக்கு வந்து, 3வது இடத்தில் இறங்கி ஐபிஎல் பிளே ஆப் சுற்றில் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
அதேபோல் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி வரும் தினேஷ் கார்த்திக், லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் அதிரடி காட்டினார். இதுவரை 15 போட்டிகளில் களமிறங்கிய அவர் 324 ரன்கள் குவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் இந்திய அணிக்கும் அழைக்கப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் தினேஷ் கார்த்திக் பங்கேற்க உள்ளார்.
மேலும் படிக்க | லக்னோ தோல்விக்குப் பிறகு காம்பீரின் ரியாக்ஷன் வைரல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR