இந்திய கேப்டன் விராட் கோலிக்கு சமீபத்தில் தந்தைவழி விடுப்பு (paternity leave) வழங்கப்பட்டது. 2021 ஜனவரியில் முதல் குழந்தையை பிரசவிக்க இருக்கும் மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் இருக்க வேண்டி கோலி கொடுத்த paternity leave விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், பிசிசிஐ (BCCI) விடுப்பு வழங்கியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மனைவியின் பிரசவத்தின் போது அவருடன் இருப்பதற்காக விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் தொடக்கப் போட்டியில் விளையாடிய பின்னர் நாடு திரும்புவார்.


paternity leave எடுத்துக் கொண்டு மனைவியுடன் அவரது தலைப் பிரசவத்தில் கூட இருக்க விரும்பும் இந்திய கேப்டன் விராட் கோலியின் முடிவை பலர் பாராட்டினார்கள். அதே வேளையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முக்கியமான டெஸ்ட் தொடரில் இருந்து கோஹ்லி எவ்வாறு வெளியேறலாம் என்றும் விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன.  


"அக்டோபர் 26, 2020 அன்று நடைபெற்ற தேர்வுக் குழு கூட்டத்தில், அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டுக்குப் பிறகு இந்தியா திரும்புவதற்கான தனது திட்டங்கள் குறித்து திரு விராட் கோலி பிசிசிஐக்கு அறிவித்திருந்தார். பிசிசிஐ இந்திய கேப்டனுக்கு தந்தைவழி விடுப்பு வழங்கியுள்ளது. அடிலெய்டில் நடைபெறவிருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் கோலி விளையாடுவார்” என்று பிசிசிஐ வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறியிருக்கிறது.


கேப்டன் கோலிக்கு முன்னர், பல இந்திய கிரிக்கெட் வீரர்களும் தந்தைவழி விடுப்புக்கு விண்ணப்பித்துள்ளனர். அவற்றில் சில ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், பல நிராகரிக்கப்பட்டன.  


ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் முதல் டெஸ்டைத் தொடர்ந்து விராட் கோலி தந்தைவழி விடுப்பு எடுக்க முடிவு செய்த விஷயம் வெளியில் வந்த பிறகு பலரும் பல விதமான கருத்துக்களை தெரிவித்தனர். முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது மகள் Ziva பிறக்கும்போது மனைவி சாக்ஷியுடன் இல்லாமல், தனது கடமையை ஆற்ற களத்தில் இருந்ததை பலரும் சுட்டிக் காட்டுகின்றனர்.


Ziva பிறந்தபோது ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுக் கொண்டிருந்த 2015 சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) உலகக் கோப்பையில் விக்கெட் கீப்பர்-பாஸ்ட்மேன் தோனி களத்தில் இருந்தார்.



தோனியின் மனைவி சாக்ஷி, தங்களுக்கு குழந்தை பிறந்திருப்பதை சொல்ல தொலைபேசியில் அழைத்தபோது, தோனி ஆடுகளத்தில் இருந்தார். எனவே தகவலைக் கூட நேரில் சொல்ல முடியாமல், சாக்ஷி, இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவிடம் தான் மகள் பிறந்ததைப் பற்றி தெரிவிக்க வேண்டியிருந்தது.


1976 ஆம் ஆண்டில் தனது மகன் ரோஹன் பிறக்கும் போது மனைவியுடன் இருக்க விரும்பிய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கரின் கோரிக்கையை BCCI நிராகரித்தது.


விடுப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், கணவர் கவாஸ்கர் இந்திய அணியுடன் மேற்கிந்தியத் தீவுகளுடனான டெஸ்ட் தொடரில் கலந்துக் கொள்ள நாடு கடந்துவிட்டார்.  
மகன் பிறந்த இரண்டரை மாதங்களுக்குப் பிறகுதான் குழந்தையின்  முகத்தைப் பார்க்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. 
(Image Credits: Twitter/@ICC)


2009 ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகளில் கலந்துக் கொண்ட முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் டிராவிட், தனது மகனின் முகத்தைக் காண போட்டியில் இருந்து விடுப்பு எடுத்துக் கொண்டு தாயகம் திரும்பி தந்தையான சந்தோஷத்தை உடனடியாக அனுபவித்தார்.


இந்திய நட்சத்திர தொடக்க பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா 2018 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் நான்காவது மற்றும் இறுதி டெஸ்டில் கலந்துக் கொள்ளாமல், விடுப்பு எடுத்துக் கொண்டு நாடு திரும்பினார். (பட உபயம்: ட்விட்டர் / @ ImRo45)


2014 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக்கில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய கெளதம் காம்பீர், மனைவியின் பிரசவத்தின் போது உடன் இருக்க விரும்பி, விடுப்பு எடுத்துக் கொண்டார். மகன் Aazeen Gambhir பிறந்த உடனே அடுத்த ஐபிஎல் போட்டியில் கலந்துக் கொள்வதற்காக சென்றுவிட்டார்.


இந்திய கேப்டன் விராட் கோலிக்கு தந்தைவழி விடுப்பு வழங்கிய தற்போதைய பி.சி.சி.ஐ தலைவர் சவுரவ் கங்குலி, தனது மகள் சனா பிறக்கும்போது, மனைவியுடன் இருக்க முடியவில்லை. குழந்தை பிறந்து ஒரு மாதத்திற்கும் பிறகு தான் மகளைப் பார்த்தார். 2001 ஆம் ஆண்டில் தனது மகள் பிறந்தபோது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தார் செளரவ் கங்குலி.



தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR