கர்ப்பிணி மனைவியின் காலணியை சுத்தம் செய்யும் கிரிக்கெட் வீரர் Virat Kohli

கர்ப்பிணி மனைவியின் செருப்பை சுத்தம் செய்யும் அன்பான கணவனின் புகைப்படத்தை அனுஷ்கா சர்மா பகிர்ந்து கொண்டிருக்கிறார். அது சமூக ஊடகங்களில் வைரலாகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 11, 2020, 04:54 PM IST
  • கர்ப்பிணி மனைவியின் காலணியை சுத்தம் செய்யும் அன்புக் கணவர் Virat Kohli
  • சேற்றில் நனைத்த காலணிகளை சுத்தம் செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது
கர்ப்பிணி மனைவியின் காலணியை சுத்தம் செய்யும் கிரிக்கெட் வீரர் Virat Kohli title=

கர்ப்பிணி மனைவியின் செருப்பை சுத்தம் செய்யும் அன்பான கணவனின் புகைப்படத்தை அனுஷ்கா சர்மா பகிர்ந்து கொண்டிருக்கிறார். அது சமூக ஊடகங்களில் வைரலாகிறது. 
இந்த புகைப்படத்தை அனுஷ்கா சர்மா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார், புகைப்படம் சமூக ஊடகங்களில் சக்கைப்போடு போடுகிறது.
புதுடெல்லி: ஐபிஎல் 2020 இல், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா (Anushka Sharma) தனது கணவர் விராட் கோலி துபாயில் விளையாடும் போது அதைப் பார்த்து ரசித்த அனுஷ்கா, தற்போது கணவர் தனக்கு பணிவிடை செய்வதையும் ரசித்து, அதை சமூக ஊடகங்களிலும் பகிர்ந்துக் கொள்கிறார்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on

விராட் கோலி கலந்துக் கொண்ட அனைத்துப் போட்டிகளிலும் அனுஷ்கா, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை (RCB) உற்சாகப்படுத்தினார். இதற்கிடையில், அனுஷ்கா ஷர்மா சமூக ஊடகங்களில் பல புகைப்படங்களை பகிர்ந்துள்ளார், மேலும் இந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகியுள்ளது.

சமீபத்தில், அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதில், நடிகை விராட் கோலியின் புகைப்படத்தை வைத்துள்ளார், அதில் விராட் கோலி தனது அன்பு மனைவியின் காலணியை சுத்தம் செய்வதைக் காணலாம். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் மிகவும் விரும்புகிறார்கள். இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் அதிகளவில் வைரலாகி வருகிறது.

'சுற்றுப்பயணத்திற்கு முன்பு, கணவர் தனது சேற்றில் நனைத்த காலணிகளை சுத்தம் செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படம்' என்று அந்த புகைப்படத்துடன் அனுஷ்கா சர்மா பகிர்ந்துக் கொண்டார். விராட் கோலியின் 32வது பிறந்தநாளில், இந்த ஜோடி ஒன்றாக கொண்டாடப்பட்டது.

விராட் கோலி-அனுஷ்கா ஷர்மா தம்பதிகளின் முதல் குழந்தை ஜனவரி மாதம் பிறக்கப்போகிறது.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News