சிட்னியில் ஜனவரி 7 ஆம் தேதி தொடங்கவிருக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் எஞ்சிய போட்டிகளில் ஸ்டார் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் இல்லை என்பதால் இந்தியாவின் கவலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கு முன்னதாக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா (India) எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. சனிக்கிழமை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த பயிற்சியின்போது வலையில் பேட்டிங் செய்யும் போது ராகுலுக்கு காயம் ஏற்பட்டது.  


"Border-Gavaskar Trophyயில் எஞ்சியுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ராகுல் (KL Rahul) விளையாட முடியாது.  ஏனெனில் அவர் முழுமையாக குணமடைந்து முழு பலத்தையும் பெற மூன்று வார காலம் தேவைப்படும்" என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) தெரிவித்துள்ளது.


Also Read | Test Jersey அணிந்து படத்தைப் பகிர்ந்தார் T.Natarajan: டெஸ்டில் ஆடுவாரா மாட்டாரா?


கே.எல்.ராகுல் குறித்து பி.சி.சி.ஐ (BCCI) அறிக்கை:
"சனிக்கிழமை டீம் இந்தியா பயிற்சி செய்துக் கொண்டிருந்த போது எம்.சி.ஜி MCGயில் ராகுல் (K.L.Rahul) பேட்டிங் செய்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது இடது மணிக்கட்டில் சுளுக்கிவிட்டது. Border-Gavaskar Trophy-இன் மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ராகுல் இருக்கமாட்டார், ஏனெனில் அவர் பூரணமாக குணமடைய மூன்று வாரங்கள் தேவைப்படும். அதன்பிறகு தான் அவரால் போட்டியில் பங்கேற்க முடியும்”.


"ராகுல் இப்போது இந்தியாவுக்கு திரும்புவார். அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று, காயத்திற்கு ஏற்ப சிகிச்சை எடுத்துக் கொண்டு பயிற்சிகளை மேற்கொள்வார்."


இந்தியாவிற்காக 26 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற 28 வயதான ராகுல் (K.L.Rahul), இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகிவிட்டார். இப்போது இந்தியாவுக்கு திரும்பும் ராகுல் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு செல்கிறார்.  அங்கு தனது உடல்நிலையை சரி செய்துக் கொண்டு இங்கிலாந்து தொடரில் பங்கேற்பார் என்று நம்பப்படுகிறது. 


Also Read | Yuvraj Singh வாங்கிய அதிவேக காரின் விலை 42 லட்சம்


முன்னணி வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா இல்லாமல் நான்கு டெஸ்ட் போட்டிகளைத் தொடங்கிய இந்தியாவுக்கு இது ஒரு பெரிய பின்னடைவு. அதன்பிறக்கு, விராட் கோலி (Virat Kohli) தந்தை வழி விடுப்பு எடுத்துவிட்டார். உமேஷ் யாதவ்   மற்றும் முகமது ஷமி போன்றவர்களும் காயம் காரணமாக விளையாடவில்லை.  


சிட்னி டெஸ்டில் ரோஹித் சர்மா இடம்பெற உள்ள நிலையில், ராகுலும் (K.L.Rahul) இருந்திருந்தால் இந்திய அணிக்கு வலு சேர்ந்திருக்கும். தற்போது இரு அணிகளிலும் 1-1 என்ற கணக்கில் சமமாக இருக்கும் நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முடிவு இரு அணிகளுகுமே முக்கியமானது.  


Also Read | Australiaவில் பாதுகாப்பு விதிகளை மீறிய 5 இந்திய வீரர்களிடம் BCCI விசாரணை


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR