Australiaவில் பாதுகாப்பு விதிகளை மீறிய 5 இந்திய வீரர்களிடம் BCCI விசாரணை

Australiaவில் பாதுகாப்பு விதிகளை மீறிய 5 இந்திய வீரர்களிடம் BCCI விசாரணை. ஐந்து கிரிக்கெட்டர்களும் ரெஸ்டாரெண்டில் இருக்கும் வீடியோ வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது

Last Updated : Jan 3, 2021, 03:39 PM IST
  • இந்திய வீரர்கள் 5 பேர் ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
  • அவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது
  • ஆனால் அவர்கள் கட்டுப்பாட்டுடன் பயிற்சியில் ஈடுபடலாம்
Australiaவில் பாதுகாப்பு விதிகளை மீறிய 5 இந்திய வீரர்களிடம் BCCI விசாரணை title=

புதுடெல்லி: கிரிக்கெட் தொடர்களில் கலந்துக் கொள்வதற்காக ஆஸ்திரேலியாவிற்கு இந்திய கிரிக்கெட் அணி சென்றிருக்கிறது. தற்போது இந்திய அணியில் ஐந்து இந்திய வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்திய வீரர்கள் (Indian Cricketers) ஐந்து பேரும் பயணம் செய்யும் போது மற்றும் பயிற்சி நடைபெறும் போது இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளில் இருந்து தனிமைப்படுத்தப்படுவார்கள். இருந்தாலும், நிர்ணயிக்கப்பட்டுள்ள கடுமையான நெறிமுறைகளின்படி இவர்கள் ஐந்து பேரும்பயிற்சி செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

Also Read | விராட் கோலியிடம் அஜிங்க்யா ரஹானே மன்னிப்பு கேட்பது ஏன்?

ரோஹித் சர்மா (Rohit Sharma), ரிஷப் பந்த் (Rishabh Pant), சுப்மான் கில் (Shubman Gill), நவ்தீப் சைனி (Navdeep Saini), பிரித்வி ஷா (Prithvi Shaw) ஆகியோர் ஒரு உணவகத்தில் இருந்த காட்சிகள் வெளியாகி சர்ச்சை வெடித்துள்ளது.  இது பாதுகாப்பு நெறிமுறைகளை (biosecurity protocols) மீறியதாகக் கருதலாம். 

பாதுகாப்பு நெறிமுறைகளை மீறியது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI)விசாரிப்பதால், இந்திய வீரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். தற்போது உள்ளூர் ரசிகர்களின் அதிருப்தியால் ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு அழுத்தம் அதிகமாகியுள்ளது.  

ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், சுப்மான் கில், பிருத்வி ஷா மற்றும் நவ்தீப் சைனி ஆகியோர் மெல்போர்ன் உணவகத்தில் ஒரு மேஜையில் அமர்ந்திருக்கும் வீடியோ, நவல்தீப் சிங் (Navaldeep Singh) என்பவரின் ட்விட்டர் கணக்கில் வெளியானதை அடுத்து இந்திய வீரர்கள் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர்.

அந்த மேசையில் இருந்தவர்களின் உணவக கட்டணத்தை தான் செலுத்தியதாகவும், ரிஷப் பந்தை கட்டிப் பிடித்ததாகவும் நவல்தீப் சிங் வெள்ளிக்கிழமையன்று தெரிவித்திருந்தார். இருப்பினும் சனிக்கிழமையன்று அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் தான் யாரையும் கட்டிப்பிடிக்கவில்லை என்றும், வீரர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தனர் என்று தெரிவித்தார்.  

இந்திய வீரர்கள் பாதுகாப்பு நெறிமுறைகளை மீறினார்களா இல்லையா என்ற குழப்பம் இருந்தது, ஆனால் SCG டெஸ்டுக்கு முன்னால் இப்படி தனிமைப்படுத்துவது ‘வேடிக்கையானது’என்று சில ரசிகர்கள் கூறுகின்றனர்.

Also Read | BCCI President தலைவர் சவுரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதி

ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நான்கு டெஸ்ட் போட்டிகள் தொடர் பாதுகாப்பு விதிகளின் பின்னணியில் விளையாடுகின்றன. தற்போதைய சூழ்நிலையில் திங்களன்று சிட்னிக்கு அணிகள் பயணிக்கும்போது கடுமையான விதிகளை பின்பற்ற வேண்டியிருக்கும்.  

இந்திய வீரர்கள் மற்றும் ஊழியர்கள் ஹோட்டலை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுகிறார்கள், ஆனால் வெளியில் தான் உணவருந்த வேண்டும் என்று கூறப்படுகிறது.

மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், நான்காவது டெஸ்டுக்கு சிட்னியில் (Sydney) இருந்து பிரிஸ்பேன் செல்லும் வீரர்களுக்கு குயின்ஸ்லாந்து (Queensland) அரசாங்கத்திடம் இருந்து அனுமதி தேவைப்படும். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு இது சுலபமானாதாக இருக்கலாம்.

Also Read | கிரிக்கெட்டிலும் சாதி, பிராமணர்களுக்காக மட்டுமே ஏற்பாடு!

இந்த பருவத்தின் தொடக்கத்தில் கிறிஸ் லின் (Chris Lynn) மற்றும் டான் லாரன்ஸ் (Dan Lawrence) ஸின் biosecurity விதிகளை மீறியதற்கு பிறகு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அப்போது, கிளப்புக்கு $ 50,000 ($ 20,000 தள்ளுபடி செய்யப்பட்டது) மற்றும் ஒவ்வொரு வீரருக்கும் $ 10,000 ($ 4,000 குறைக்கப்பட்டது) அபராதம் விதிக்கப்பட்டது.

2020 ஆம் ஆண்டில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் (Jofra Archer) biosecurity விதிகளை மீறியதாக கண்டறியப்பட்டபோது அவர் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது. ஆர்ச்சர், ஒரு ஹோட்டலில் இருந்து மற்றொன்றுக்கு பயணம் செய்யும் போது இடையில் தனது வீட்டிற்கு சென்றார்.  

தற்போது 5 இந்திய வீரர்களுக்கும் என்ன தடை விதிக்கலாம் என்பதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) முடிவு செய்யும்.

Also Read | பன்றி மற்றும் மாட்டிறைச்சி சாப்பிட்ட டீம் இந்தியா வீரர்கள்; பொங்கி எழும் ரசிகர்கள்!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR   

Trending News