#ENGvWI 1st Test: 143 ஆண்டு கிரிக்கெட் வரலாற்றில் பார்வையாளர்கள் இல்லாமல் நடக்கும் முதல் போட்டி
143 ஆண்டுகால உலக கிரிக்கெட் வரலாற்றில் பார்வையாளர்கள் இல்லாமல் வெற்று மைதானத்தில் கிரிக்கெட் விளையாடப்படுவது இதுவே முதல் முறையாகும்.
Cricket News: கொரோனா வைரஸின் மத்தியில் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கப் போகிறது. ஜூலை 8 முதல், ரோஸ் பவுல் (The Rose Bowl) ஸ்டேடியத்தில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஒருவருக்கொருவர் எதிர்கொள்ள இருக்கின்றனர். நாளை (புதன்கிழமை) வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து (England vs West Indies) களத்தில் விளையாடும்போது, இது 143 ஆண்டுகால டெஸ்ட் (Test Cricket) கிரிக்கெட்டில் வரலாற்று புதிய தருணமாக இருக்கும். உலக கிரிக்கெட் வரலாற்றில் பார்வையாளர்கள் இல்லாமல் வெற்று மைதானத்தில் கிரிக்கெட் விளையாடப்படுவது இதுவே முதல் முறையாகும்.
கொரோனா தொற்றுநோய் (Coronavirus) அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு ஐ.சி.சி கிரிக்கெட் விதிகளையும் மாற்றியுள்ளது. இப்போது பந்தின் மீது எச்சில் வைப்பது முற்றிலும் நிறுத்தப்பட்டு உள்ளது. வீரர்கள் களத்தில் அதிக ஒருவருக்கொருவர் கை குலுக்க முடியாது, அணைத்துக்கொள்ள முடியாது. மேலும் அவர்களின் கண்ணாடிகளையும் தொப்பிக்களையும் அம்பயருக்கும் கொடுக்க முடியாது. அவ்வப்போது, அனைத்து வீரர்களும் தங்கள் கைகளை கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்த வேண்டும்.
இதையும் படியுங்கள் - போட்டியின் முதல் பந்தை டெண்டுல்கர் எதிர்கொள்ளமாட்டார்-செளரவ் கங்குலி
கடந்த நான்கு மாதங்களுக்கு பிறகு, மீண்டும் கிரிக்கெட் (Cricket) போட்டிகள் முழுமையான நிலைக்கு வந்துவிட்டன. மார்ச் 13 அன்று, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இடையே கடைசி சர்வதேச போட்டி நடைபெற்றது. இதற்கிடையில், தென்னாப்பிரிக்காவின் இந்திய சுற்றுப்பயணமும் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.
இதையும் படியுங்கள் - T20 World Cup 2020 தொடரை நியூசிலாந்தில் நடத்தலாம்: டீன் ஜோன்ஸ் பரிந்துரை
கொரோனா தொற்றுநோய் காரணமாக அக்டோபர் - நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள டி-20 உலகக் கோப்பையும் (T20 World Cup 2020) நடக்குமா? நடக்காதா? என சமநிலையில் சிக்கியுள்ளது. டி-20 உலகக் கோப்பை (T20 World Cup) ரத்து செய்வது குறித்து ஐ.சி.சி விரைவில் அறிவிக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், பிசிசிஐ இந்த காலகட்டத்தில் ஐபிஎல் 2020 தொடரை நடத்த ஏற்பாடு செய்ய முடியும்.
செய்தி மற்றும் நேரடி செய்தி புதுப்பிப்புகளுக்கு, பேஸ்புக் @ZeeHindustanTamil மற்றும் ட்விட்டரில் @ZHindustanTamil மூலம் எங்களைப் பின்தொடரவும். Zeehindustantami.in இணையதளம் விரிவான மற்றும் சமீபத்திய செய்திகளைப் படியுங்கள்!!