போட்டியின் முதல் பந்தை டெண்டுல்கர் எதிர்கொள்ளமாட்டார்-செளரவ் கங்குலி

டெண்டுல்கர் போட்டியின் முதல் பந்தை எதிர்கொள்ளாததன் காரணத்தை அம்பலப்படுத்திய கங்குலி

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 6, 2020, 02:47 PM IST
  • ஒருநாள் போட்டிகளில் 176 இன்னிங்ஸ்களில் 8,227 ரன்களை கங்குலியும் டெண்டுல்கரும் ஒன்றாக எடுத்தது சாதனைப் பதிவு
  • டெண்டுல்கர் 51 டெஸ்ட் சதங்களையும் அடித்திருக்கிறார்
  • ஒருநாள் கிரிக்கெட்டில் டெண்டுல்கர் 18,426 ரன்கள் எடுத்து பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்
  • டெண்டுல்கர் தனது தொழில் வாழ்க்கையில் 24 ஆண்டுகளாக நீடித்து ஆறு உலகக் கோப்பைகளில் பங்கெடுத்துள்ளார்
போட்டியின் முதல் பந்தை டெண்டுல்கர் எதிர்கொள்ளமாட்டார்-செளரவ் கங்குலி title=

புதுடெல்லி: கிரிக்கெட் போட்டியின் முதல் பந்தில் சச்சின் டெண்டுல்கர் ஏன் ஒருபோதும் ரன் எடுக்கவில்லை என்ற ரகசியத்தை அம்பலப்படுத்தினார் இந்தியாவின் முன்னாள் கேப்டனும் தற்போதைய பிசிசிஐ தலைவருமான செளரவ் கங்குலி.

சச்சின் டெண்டுல்கருடன் தான் களம் இறங்குமோது, எப்போது தானே முதலில் பேட்டிங் செய்ததாக கங்குலி கூறினார் அதுபற்றி பேசிய கங்குலி, "ஆம், அவர் எப்போதும் என்னை தான் முதலில் மட்டை வீசச் சொல்வார். சில சமயங்களில் நீங்களே முதல் பந்தை எதிர்கொள்ளுங்கள் என்று அவரிடம் சொல்லியிருக்கிறேன். ஆனால் அதற்கு அவரிடம் எப்போதும் ஒரு பதில் தயாராக இருக்கும்” என்று தெரிவித்தார்.

பி.சி.சி.ஐ.யின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் தொடக்க பேட்ஸ்மேன் மயங்க் அகர்வால் பதிவிட்டிருந்த வீடியோவில் பதிலளித்த கங்குலி இவ்வாறு தெரிவித்தார்.

Also Read | இலங்கை கிரிக்கெட் வீரர் குசல் மெண்டிஸ் கைது.... கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி...!!!

இது பற்றி கூறும் கங்குலி, "சச்சினிடம் எப்போதும் இரண்டு பதில்கள் இருந்தன, ஒன்று ஒருவர் ஸ்திரமாக விளையாடிக் கொண்டிருகும்போது அதையே தொடர வேண்டும் என்று அவர் நம்பினார். அடுத்ததாக, மேலும் ஸ்திரமாக இல்லாத நிலையில் களத்தில் இருக்கும்போது, புதிதாக மட்டை வீச வருபவருக்கு கொடுக்கப்படும் வாய்ப்பு சரியாக இருக்கும் என்று நினைப்பார்”. 

இருப்பினும், டெண்டுல்கருடன் சில முறை களத்தில் இருந்தபோது, ஓரிரு முறை தானும் non-striker பகுதியில் இருந்து விளையாடியிருப்பதாகவும் கங்குலி குறிப்பிட்டார்.

"அவர் நல்ல நிலையில் விளையாடிக் கொண்டிருக்கும்போது, ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும்போதும் ஓரிரு முறை நான் non-striker இடத்தில் இருந்து மட்டை வீசியிருக்கிறேன்" என்று கங்குலி கூறினார். 

Also Read | 2011 World-cup cricket match fixing: இலங்கையில் விசாரணை தொடங்கியது

ஒருநாள் போட்டிகளில் சராசரியாக 47.55 உடன் 176 இன்னிங்ஸ்களில் 8,227 ரன்களை கங்குலியும் டெண்டுல்கரும் ஒன்றாக எடுத்து சாதனை படைத்திருக்கின்றனர். வேறு எந்த ஜோடியும் ஒருநாள் போட்டிகளில் 6,000 ரன்களைக் கூட தாண்டவில்லை. 15,921 ரன்கள் எடுத்து டெண்டுல்கர் மிக அதிகமான ரன்களைக் குவித்துள்ளார். டெண்டுல்கர் 51 டெஸ்ட் சதங்களையும்  அடித்திருக்கிறார். 

ஒருநாள் கிரிக்கெட்டில் 18,426 ரன்களைக் குவித்துள்ள டெண்டுல்கர் அதிக ரன்கள் எடுத்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். டெண்டுல்கர் தனது தொழில் வாழ்க்கையில் 24 ஆண்டுகளாக நீடித்து நிலைத்து நின்று ஆறு உலகக் கோப்பைகளில் பங்கெடுத்துள்ளார். 

Also Read | ரோஹித் சர்மா ஒரு சிறந்த ஒருநாள் ஆட்டக்காரர்; ஸ்ரீகாந்த் புகழாரம்..

2011 உலகக் கோப்பை வென்ற அணியின் ஒரு பகுதியாக இருந்தார். மறுபுறம், கங்குலி மிகவும் வெற்றிகரமான இந்திய ஸ்கிப்பர்களில் ஒருவராக அறியப்படுபார். அவரது தலைமையின் கீழ், இந்தியா ஒரு டெஸ்ட் தொடரில் முதல் முறையாக பாகிஸ்தான் மண்ணில் பாகிஸ்தானை தோற்கடித்தது.

2003 கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிகளுக்கும் அவர் இந்தியாவை வழிநடத்தினார். கங்குலி 113 டெஸ்ட் மற்றும் 311 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். swashbuckling left-handed batsman செளரவ் கங்குலி தனது சர்வதேச கிரிக்கெட் அனைத்து வடிவங்களிலும் 18,575 ரன்கள் எடுத்துள்ளார். 2019 அக்டோபர் மாதத்தில், கங்குலி பி.சி.சி.ஐ.யின் தலைவராக பதவியேற்றுக் கொண்டார்.

Trending News