Hockey World Cup 2023: 15வது உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள், ஒடிஷா மாநிலம் ரூர்கேலா மற்றும் புவனேஷ்வரில நடைபெற உள்ளன. இந்த ஹாக்கி உலகக் கோப்பை போட்டிகள் ஜனவரி 13 முதல் 29 ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. முதல் போட்டி, புவனேஷ்வர் நகரில் இன்று தொடங்குகிற்து. 2018ம் ஆண்டிலும் புவனேஷவரில் ஹாக்கி உலக்கோப்பைப் போட்டிகள் நடைபெற்றது குறிபிடத்தகக்கது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா கடைசியாக 1975இல் அஜீத்பால் சிங் தலைமையில் தங்கப் பதக்கம் வென்றது. தற்போது இந்தியா இடம்பெற்றுள்ள குழுவில் இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் போன்ற வலுவான அணிகள் உள்ளன.


இந்த உலகக் கோப்பை போட்டிகளுக்காக, பழங்குடியின புரட்சியாளர் பிர்ஸா முண்டாவின் பெயரில் ரூர்கேலாவில் ஒரு மைதானம் பிரத்யேகமாக கட்டப்பட்டுள்ளது. ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு பதக்கத்தை வென்று இந்திய அணி தனது நீண்ட காலக் கனவை நனவாக்கியது. இதனையடுத்து, இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பையை இந்தியா கைப்பற்றும் என்று நாடு ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது.



இந்த நிலையில், இந்திய ஆண்கள் ஹாக்கி அணி ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை போட்டிகளின் முதல் போட்டியிலேயே வெற்றிவாகை சூட விரும்புகிறது. யார் கோப்பையை வெல்வார்கள்? நடப்புச் சாம்பியனான பெல்ஜியம் முதல் போட்டியை நடத்தும் இந்தியா வரையிலான சிறந்த ஹாக்கி அணிகள் இவை. இந்த அணிகளில் ஒன்றுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.  


பெல்ஜியம் ஆண்கள் ஹாக்கி அணி
நடப்பு சாம்பியனான பெல்ஜியம் ஆடவர் ஹாக்கி அணி, கோப்பையை தக்க வைக்கும் முயற்சியில் கடினமான உழைக்கும். பெல்ஜியம் அணி கோப்பையை மீண்டும் பிரஸ்ஸல்ஸுக்கு கொண்டு செல்லும் உறுதியில் களம் இறங்குகின்றனர்.


மேலும் படிக்க | ரஷித் கான் செய்த அதிரடி! திகைத்து போன ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம்!


ஆஸ்திரேலியா ஆண்கள் ஹாக்கி அணி
உலகின் நம்பர் 1 தரவரிசையில் உள்ள ஆஸ்திரேலியாவும், கோப்பையை கைப்பற்ற அனைத்து முயற்சிகளையும் எடுக்கும். 2018ஆம் ஆண்டு ஹாக்கி உலகக்கோப்பைக் கனவு கைகூடவில்லை என்றாலும், வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியது ஆஸ்திரேலியா


நெதர்லாந்து ஆண்கள் ஹாக்கி அணி
ஹாக்கி உலகக் கோப்பையின் கடந்த இரண்டு பதிப்புகளிலும் நெதர்லாந்து அணி ஏமாற்றத்தை சந்தித்தது. 2018ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் பெனால்டி ஷூட்அவுட்டில் இறுதியில் சாம்பியனான பெல்ஜியத்திடம் தோல்வியடைந்த நெதர்லாந்து அணி,. ஹாக்கி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அதிக தோல்விகளை (4) பெற்ற அணி என்ற பதிவை வைத்துள்ளது.


ஜெர்மனி ஆண்கள் ஹாக்கி அணி
ஹாக்கி உலகக்கோப்பை போட்டிகளில் மூன்றாவது முறை கோப்பை வெல்லும் முயற்சியில் ஜெர்மனி அணி கடுமையாக உழைத்து வருகிறது. தரவரிசைப் பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ள இந்த அணி இதற்கு முன்பு 2002 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில், ஆடவர் பிரிவின் ஹாக்கி உலகக்கோப்பையை வென்றுள்ளது.


இந்திய ஆண்கள் ஹாக்கி அணி
ஹர்மன்ப்ரீத் சிங்கின் தலைமையில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி, வெள்ளிக்கிழமை (ஜனவரி 13) ரூர்கேலாவில் தொடங்கும் ஹாக்கி உலகக் கோப்பை 2023இல் களம் காண்கிறது. சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் உற்சாகத்துடன் இந்திய ஆடவர் ஹாக்கி அணி களம் இறங்குகிறது. உலகக் கோப்பை ஹாக்கியில் இந்தியா கடைசியாக வெற்றியை ருசித்து 47 ஆண்டுகள் ஆகிறது.  


மேலும் படிக்க | இனி இவர்களுக்கு இந்திய அணியில் இடம் இல்லை: ஓரம்கட்டிய பிசிசிஐ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ