இந்திய அணியின் டி-20 கேப்டனாக ஹர்திக் பாண்டியா பெயர் முதலிடத்தில் உள்ளது. ஆனால், அவர் நீண்ட காலமாக அணியில் இருந்து விலகி இருக்கிறார். ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களிலும் காயம் காரணமாக அவர் விளையாடவில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சூழலில், ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பொறுப்பு கொடுப்பது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசியுள்ளார். அவர் கூறுகையில், "ஹர்திக் பாண்டியா நிறைய கிரிக்கெட் போட்டிகளை காயம் காரணமாக தவறவிடுகிறார். அதேநேரத்தில் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு முழு கவனத்தையும் செலுத்தி, காயத்தில் இருந்து குணமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறார். ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடருக்கு வந்துவிடுவார் என்பது தான் எல்லோருடைய நம்பிக்கையும். ஆனால் அது நடக்குமா? என்று கூட இப்போது சொல்ல முடியாது.


மேலும் படிக்க | இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட உள்ளேன் - அம்பதி ராயுடு!


ஒருவேளை அவர் ஐபிஎல் போட்டியில் நேரடியாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இறங்கலாம். ஆனால், இந்திய அணியின் கேப்டன் பொறுப்பு என்று வரும்போது பல விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. அடிக்கடி அவர் காயத்தால் பாதிக்கப்படுவதால், நிறைய சர்வதேச போட்டிகளை தவறவிடுவதாலும் இந்திய அணிக்கு கேப்டன் என்ற பொறுப்புக்கு ஹர்திக் பாண்டியா பெயர் பரிசீலிக்கப்படாது என நினைக்கிறேன்.



இளம் வீரர்களுக்கும் 20 ஓவர் உலக கோப்பைக்கு இந்திய அணியின் கேப்டனாக நியமிக்க வாய்ப்பு குறைவு தான். சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட சில வீரர்கள் இருந்தாலும், அனுபவம் வாய்ந்த வீரர்களின் தலைமையிலேயே இந்திய அணியை 20 ஓவர் உலக கோப்பைக்கு பிசிசிஐ அனுப்பும் என நினைக்கிறேன். என்னுடைய சாய்ஸ் ரோகித் சர்மா தான். அவரது தலைமையிலேயே இந்திய அணி விளையாட வேண்டும், அப்போது தான் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க | டி20யில் ரோஹித், விராட்... ஆனால் இவர்களுக்கு வாய்ப்பில்லை - இந்திய அணி அறிவிப்பு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ