INDvsBAN: இந்திய அணியில் ஏற்பட்டிருக்கும் 3 அதிரடி மாற்றங்கள்!
india vs bangladesh: பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்துள்ளது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
india vs bangladesh: டாக்காவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 186 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். பந்து வீச்சாளர்கள் பங்களாதேஷை 136-9 என்று கொண்டு சென்றாலும், மெஹிதி ஹசன் மிராஸ் மற்றும் முஸ்தாபிசுர் ரஹ்மான் இடையேயான கடைசி விக்கெட் பார்ட்னர்ஷிப் பங்களாதேஷ் அணியை காப்பாற்றியது. மெஹிடி இரண்டாவது போட்டியில் மீண்டும் தனது அசத்தலான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். முதல் இன்னிங்ஸில் தனது அணியை 69-6 என்ற நிலையில் இருந்து 271-7 என்ற சிறப்பான ஸ்கோருக்கு மீட்டார். ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்சர் படேல் நல்ல பார்ட்னர்ஷிப் மூலம் ஈடுகட்டினாலும், காயம் அடைந்த ரோஹித் ஷர்மா ஆட்டமிழக்காமல் 51 (28) ரன்களைக் குவித்தும் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்நிலையில் 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் சில மாற்றங்கள் நிகழ உள்ளது.
மேலும் படிக்க | அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 7 விக்கெட்டுகளை சாய்த்த பாக்., பவுலர்
ரோஹித்தின் கட்டைவிரல் காயம் காரணமாக அவர் இறுதி ஒருநாள் போட்டியில் பங்கேற்க முடியவில்லை. சஞ்சு சாம்சன் மற்றும் ஷுப்மான் கில் இல்லாத நிலையில், ராகுல் திரிபாதி அணியில் இடம்பெற உள்ளார். ஐபிஎல்லில் வலுவான இரண்டு சீசன்களுக்குப் பிறகு, திரிபாதி விஜய் ஹசாரே டிராபில் சிறந்து விளங்கினார். எட்டு போட்டிகளில் 87.33 சராசரி மற்றும் 94.24 ஸ்ட்ரைக் ரேட்டில் 524 ரன்கள் எடுத்தார், மேலும் மூன்று சதங்கள் மற்றும் இரண்டு அரைசதங்கள் அடித்தார். இன்றைய போட்டியில் சிறப்பாக ஆடும் பட்சத்தில் 2023 ODI உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பெறலாம். ஷிகர் தவான் கடைசி 10 ஒருநாள் போட்டிகளில் அவர் ஒரு அரை சதம் மட்டுமே எடுத்துள்ளார் மற்றும் வங்கதேசத்திற்கு எதிரான கடைசி இரண்டு போட்டிகளில், அவரது ஸ்கோர்கள் ஏழு (17) மற்றும் எட்டு (10) ஆகும். இதனால் அவருக்கு பதிலாக இஷான் கிஷனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சமீபத்தில் 84 பந்துகளில் 93 ரன்கள் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
வேகப்பந்து வீச்சாளர்களான குல்தீப் சென் மற்றும் தீபக் சாஹர் காயம் காரணமாக வெளியேறியதை அடுத்து குல்தீப் யாதவ் கடைசி ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம் பெற உள்ளார். இதன் மூலம் இந்தியா மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடும். குல்தீப் காயத்தில் இருந்து திரும்பியதில் இருந்து நன்றாக ஆடி வருகிறார். ஆனால் இந்தியாவுக்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்திய போதிலும், அவர் நியூசிலாந்து சுற்றுப்பயணம் முழுவதும் விளையாடவில்லை மற்றும் தொடரில் இருந்து நீக்கப்பட்டார். அடுத்த ஆண்டு சொந்த மண்ணில் நடக்கவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன்னதாக தனது அதிர்ஷ்டத்தை மாற்றுவதற்கு அவருக்கு இந்த போட்டி உதவக்கூடும்.
மேலும் படிக்க | அடுத்த ஆண்டு இந்திய அணி விளையாடும் போட்டிகள்: முழு விவரம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ