ஆக்லாந்தில் நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.  இருப்பினும், பூஜா வஸ்த்ரகரின் பேட்டிங் மற்றும் பவுலிங் இந்திய அணிக்கு ஒரு ஆறுதலை கொடுத்துள்ளது.   வஸ்த்ரகர் 28 பந்துகளில் 34 ரன்கள் குவித்ததுடன், 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். அவரது தனிப்பட்ட ஃபார்ம் இருந்தபோதிலும், இந்தியா ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது, இதனால் போட்டியில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற முதல் அணியாக ஆஸ்திரேலியா ஆனது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ரோகித்துடன் விளையாடி முடிவுக்கு வந்த 3 வீரர்களின் ஐபிஎல் கேரியர்


பூஜா பந்துவீச்சு மற்றும் பேட்டிங் பார்மை தவிர, ஆஸ்திரேலியாவின் மெக் லானிங்கை ஆட்டமிழக்க ஒரு அற்புதமான டைவிங் கேட்ச் மூலம் வஸ்த்ரகர் தனது பீல்டிங் திறமையையும் வெளிப்படுத்தினார். 97 ரன்களில் இருந்த லானிங் கொடுத்த கேட்சை டைவ் அடித்து பிடித்தார்.  வர்ணனையாளர், "என்ன கேட்ச்! என்ன அற்புதமான கேட்ச்!" என்று வர்ணித்தனர்.  


 



மெக் லானிங் 107 பந்துகளில் 97 ரன்கள் விளாச, ஆஸ்திரேலியா 278 ரன்கள் இலக்கை எளிதாக வென்றது.  அலிசா ஹீலி 65 பந்துகளில் 72 ரன்கள் எடுத்தார்.  ரேச்சல் ஹெய்ன்ஸ் 53 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார், ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுக்கு 280 ரன்கள் எடுத்தது.  தொடக்கத்தில் மிதாலி ராஜ், யாஸ்திகா பாட்டியா, ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர் அரைசதம் விளாச இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்தது.  மிதாலி ராஜ் 96 பந்துகளில் 68 ரன்களும், பாட்டியா 83 பந்துகளில் 59 ரன்களும் எடுத்தனர்.  இதற்கிடையில், ஹர்மன்பிரீத் கவுர் 47 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.


இந்த தோல்விக்கு பிறகு, இந்தியா இரண்டு வெற்றிகள் மற்றும் 3 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.  பெண்கள் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக வெற்றிகரமான ரன் சேஸ் என்ற சாதனையை ஆஸ்திரேலியா முறியடிக்க இந்த வெற்றி உதவியது, 2017 போட்டியில் இலங்கைக்கு எதிராக அவர்கள் அமைத்த சாதனையை முறியடித்தது.


மேலும் படிக்க | தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக சாதனை படைத்த வங்கதேசம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR