தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக சாதனை படைத்த வங்கதேசம்!

ஷாகிப் அல் ஹசனின் ஆட்டத்தால் வங்கதேசம் முதல் முறையாக தென்னாப்பிரிக்காவில் வெற்றி பெற்றது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 19, 2022, 09:42 AM IST
  • முதல் வெற்றியை பெற்ற வங்கதேசம்.
  • 64 பந்துகளில் 77 ரன்கள் எடுத்த ஷாகிப் அல் ஹசன்.
  • தென்னாப்பிரிக்கா முக்கிய வீரர்கள் இன்றி திணறல்.
தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக சாதனை படைத்த வங்கதேசம்! title=

தென்னாப்பிரிக்காவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.  முந்தைய 19 ஆட்டங்களில், மூன்று வடிவங்களிலும் பங்களாதேஷ் தென்னாப்பிரிக்காவை அவர்களின் சொந்த மண்ணில் வென்றதில்லை. தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பங்களாதேஷ் அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.  முதல் ஒருநாள் போட்டி நேற்று  செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்றது.  டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பீல்டிங் தேர்வு செய்தது.  

மேலும் படிக்க | 16 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு நோ-பால் கூட வீசாத இந்திய வீரர்

 

ஷாகிப் அல் ஹசனின் வலுவான பேட்டிங்கினால் பங்களாதேஷ் அணியின் ஸ்கோர் உயர்ந்தது.  64 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார் ஷாகிப்,  லிட்டன் தாஸ் மற்றும் யாசிர் அலி இருவரும் அரைசதம் அடித்தனர். இதனால் இறுதியில் பங்களாதேஷ்  7 விக்கெட்டுக்கு 314 ரன்கள் எடுத்தது.  பின்பு களம் இறங்கிய தென்னாப்பிரிக்கா அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது.  வேகப்பந்து வீச்சாளர்கள் ஷோரிஃபுல் இஸ்லாம் மற்றும் தஸ்கின் அகமது ஆகியோர் சிறப்பாக பந்து வீசி தென்னாப்பிரிக்காவின் விக்கெட்களை வீழ்த்தினர்.  

ரஸ்ஸி வான் டெர் டஸ்சன் 86 ரன்களும், டேவிட் மில்லர் 79 ரன்களும் எடுத்தனர், ஆனாலும் தென்னாப்பிரிக்கா 276 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வங்காளதேசம் இதற்கு முன்பு தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக விளையாடிய ஒவ்வொரு போட்டியிலும் தோல்வியடைந்தது. ஆறு டெஸ்ட், ஒன்பது ஒரு நாள் மற்றும் நான்கு டுவென்டி 20 சர்வதேசப் போட்டிகள் என அனைத்திலும் தோல்வி அடைந்து இருந்தது.  இதனால் இந்த வெற்றி பங்களாதேஷ் அணிக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.  மூன்று ஆட்டங்கள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி ஞாயிற்றுக்கிழமை ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற உள்ளது.  

மேலும் படிக்க | ஐபிஎல்-காக மொத்த அணியையும் மாற்றிய தென் ஆப்பிரிக்கா!

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News