ஐபிஎல் தொடரின் வெற்றிகரமான கேப்டனாக இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா உள்ளார். 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் பங்கேற்று வரும் அவர், ஒரு வீரராக 6 முறை ஐபிஎல் பட்டத்தை வென்றுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்து 5 முறை சாம்பியனாக்கியுள்ளார். ஆனால் அவருடன் விளையாடிய 3 வீரர்களின் ஐபிஎல் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. அவர்கள் யார்? என்பதை பார்க்கலாம்.
மேக்கே
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான கிளையண்ட் மெக்காய் பல ஆண்டுகளாக ஆஸ்திரேலியா அணியின் முக்கிய வீரராக இருந்தார். 2009 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்காக அறிமுகமான அவர், கடைசியாக 2014 ஆம் ஆண்டு அந்த அணிக்காக விளையாடினார். 2012 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியால் விலைக்கு வாங்கப்பட்ட மெக்காய், ரோகித் சர்மாவுடன் விளையாடினார். 2013 ஆம் ஆண்டு ஹைதராபாத் அணிக்கு சென்ற அவர், இப்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க | "ஐபிஎல் திருவிழா 2022" - புதிய மாற்றமும் புதிய வியூகமும்..!
ராபின் பீட்டர்சன்
தென்னாப்பிரிக்காவின் ராபின் பீட்டர்சனும் ஐபிஎல் தொடரில் ரோஹித்தின் கேப்டன்சியில் விளையாடியுள்ளார். ராபின் பீட்டர்சன் 2011 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர். 2012 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோஹித் சர்மாவுடன் விளையாடினார். மும்பை இந்தியன்ஸ் அணியால் 50 லட்சத்துக்கு வாங்கப்பட்ட அவர், 5 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். 2014 ஆம் ஆண்டு கடைசியாக சர்வதேச போட்டியில் விளையாடிய அவர், இப்போது ஓய்வை அறிவித்துள்ளார்.
சஞ்சய் பங்கர்
இந்திய வீரரான சஞ்சய் பாங்கர் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற பிறகு பயிற்சியாளராக அவதாரம் எடுத்தார். அவர் 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் களம் இறங்கியபோது அவருக்கு வயது 35. அப்போது ரோகித் சர்மா இளம் வீரராக இருந்தார். இருவரும் ஒரே அணியில் விளையாடினர். 12 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய பாங்கர், 49 ரன்கள் எடுத்ததுடன், 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 2009 ஆம் ஆண்டுடன் அவரின் ஐபிஎல் கிரிக்கெட் கேரியரும் முடிவுக்கு வந்தது.
மேலும் படிக்க | 16 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு நோ-பால் கூட வீசாத இந்திய வீரர்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR