துபாய்: ஐபிஎல் 2020: ஆல்ரவுண்ட் சென்னை சூப்பர் கிங்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதையடுத்து புள்ளிப் பட்டியலில் RCB மூன்றாவது இடத்தில் இருக்கும் நிலையில், தற்போது CSK ஏழாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

துபாய்: மூன்று தொடர் தோல்விகளுக்குப் பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) இறுதியாக ஒரு போட்டியில் வென்றது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.


இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2020 இன் 44வது போட்டியில் சூப்பர் சண்டேவின் இரண்டு போட்டிகளில் முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே தான் ஆல்ரவுண்ட்டர் தான் என்பதை நிரூபித்தது. இந்த சீசனின் நான்காவது போட்டியில் வென்றது சென்னை அணி.


முதலில் பேட்டிங் செய்த ஆர்.சி.பி கேப்டன் விராட் கோஹ்லி, புள்ளிகள் அட்டவணையில் முதலிடம் பெற வாய்ப்பு கிடைத்தது, ஆனால் அவரது அணியை சென்னை சூப்பர் கிங்ஸின் பந்து வீச்சாளர்கள் கட்டுப்படுத்திவிட்டனர். இறுதியில்  20 ஓவர்களில் 145-6 என்ற ஸ்கோரில் நின்றுவிட்டது பெங்களூரு அணி
தொடக்க ஆட்டக்காரர்களான ஆரோன் பிஞ்ச்  மற்றும் தேவ்துத் பாடிக்கல் ஆகியோர் ஆர்.சி.பி.க்குத் தேவையான தொடக்கத்தை வழங்க முடியவில்லை. ஏழாவது ஓவரில் பெவிலியனுக்கு திருப்பினார்கள்.


தொடர்புடைய செய்தி | IPL 2020 Match 43: கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், In Pics\


அவர்களின் விக்கெட்டுகளைத் தொடர்ந்து, கோஹ்லி (43 பந்துகளில் 50), ஏபி டிவில்லியர்ஸ் (36 பந்துகளில் 39) என 82 ரன்கள் கூட்டணியைக் குவித்து, ஒரு பெரிய ஸ்கோரை நோக்கி நகர்ந்தனர், ஆனால் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.


பின்னர் கடைசி மூன்று ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த ஆர்சிபி  20 ஓவர்களில் 145 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.


சென்னை அணியின் இளைஞர், 22 வயதான சாம் குர்ரான் மூன்று விக்கெட்டுகளையும், தீபக் சாஹர் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.
 
146 ரன்களை வெற்றி இலக்காக வைத்து களம் இறங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான Faf du Plessis மற்றும் Ruturaj Gaikwad சென்னை அணிக்கு நல்லதொரு தொடக்கத்தை அளித்தனர். 13 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள், இரண்டு சிக்ஸர்கள் என 25 ரன்கள் எடுத்தா ஃபாஃப்.


பின்னர் கெய்க்வாட் (51 ரன்களில் 65 *) ,அம்பதி ராயுடு (27 பந்துகளில் 39) உடன் 50 ரன்கள் எடுத்தார், பிளேஆஃப் சுற்றுக்கு போகலாம் என்ற மெல்லிய நம்பிக்கையை தனக்கு அணிக்கு கொடுக்கும் முயற்சியில் அவர் வெற்றி பெற்றார் என்றே சொல்லலாம். 


இந்த சீசனில் ஆர்.சி.பி. மற்றும் சி.எஸ்.கே  இரண்டாவது முறையாக மோதினார்கள். அவர்களின் கடைசி போட்டியில் பெங்களூரு   சென்னை அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.


RCB மூன்றாவது இடத்தில் இருக்கும்போது, சி.எஸ்.கே ஏழாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.



கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR