IPL 2021, KKR vs RR: அசால்டாக ஆடி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் அணி
IPL 2021-ல் இன்று நடந்த 18 வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
IPL 2021, KKR vs RR: மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முன்னதாக, டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கொல்கத்தா அணியை பேட் செய்ய அழைத்தது. 20 ஓவர்களின் முடிவில், கொல்கத்தா அணி 9 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை எடுத்தது.
134 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 18.5 ஓவர்களில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 80 ரன்களை எடுத்திருந்த ராஜஸ்தான் அணி 15 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 104 ரன்களை எடுத்திருந்தது.
கொரோனா தொற்றுக்கு மத்தியில் IPL 2021 சென்னை மற்றும் மும்பை நகரங்களில் நடந்து வருகிறது. தொற்றின் காரணமாக, வழக்கமாக பல நகரங்களில் நடக்கும் IPL போட்டிகள் இந்த ஆண்டு இந்த இரு நகரங்களில் மட்டும் பார்வையாளர்கள் இல்லாமல் நடக்கின்றன.
ALSO READ: IPL 2021, KKR vs RR: ராஜஸ்தான் அணிக்கு இலக்கு 134, ஸ்கோர்: KKR-133/9
இன்றை ஆட்டத்துக்கு முன்னதாக, கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான், இரு அணிகளும் 4 போட்டிகளில் தலா 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று சமமாக இருந்தன. இன்று வெற்றி பெற்றதால், ராஜஸ்தான் அணி கொல்கத்தா அணியை பின்னுக்குத் தள்ளி முன்னேறியுள்ளது.
முதலில் பேட்டிங் செய்ய வந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை எடுத்தது. 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 54 ரன்களை எடுத்திருந்தத கொல்கத்தா அணி 15 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 93 ரன்களை எடுத்திருந்தது. ஆட்ட நேர இறுதியில், ராஜதான் அணிக்கு 134 ரன்களுக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இரண்டாவதாக பேட்டிங் செய்ய வந்த ராஜஸ்தான் அணி துவக்கம் முதலே நிதானமாக ஆடியது. அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், பொறுமையாகவும் பொறுப்பாகவும் ஆடி 41 பந்துகளில் 42 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இன்றைய வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, அணிப் பட்டியலில் ஆறாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணி விவரங்கள் பின் வருமாறு:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி: எயோன் மோர்கன் (கேப்டன்), நிதீஷ் ராணா, சுப்மான் கில், ராகுல் திரிபாதி, , தினேஷ் கார்த்திக், சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸ்ஸல், பாட் கம்மின்ஸ், கமலேஷ் நாகர்கோட்டி, வருண் சக்ரவர்த்தி, பிரசீத் கிருஷ்ணா ஹஸ்க்ப் சிங் .
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி: சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஜோஸ் பட்லர், மனன் வோஹ்ரா, டேவிட் மில்லர், சிவம் தூபே, ரியான் பராக், ராகுல் தெவாதியா, கிறிஸ் மோரிஸ், ஸ்ரேயஸ் கோபால், சேதன் சகாரியா, முஸ்தாபிஸூர் ரஹ்மான், ஜெய்தேவ் உனட்கட், ஆண்ட்ரூ டை, லியாம் லிவிங்ஸ்டன் , கே.சி. காரியப்பா, மஹிபால் லோமர், மாயங்க் மார்க்கண்டே, அனுஜ் ராவத், கார்த்திக் தியாகி, குல்தீப் யாதவ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஆகாஷ் சிங்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR