IPL 2021, KKR vs RR: ராஜஸ்தான் அணிக்கு இலக்கு 134, ஸ்கோர்: KKR-133/9

IPL 2021-ல் இன்று நடந்துகொண்டிருக்கும் 18 வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) இடையேயான போட்டி நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன்களை எடுத்தது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 24, 2021, 10:44 PM IST
  • IPL 2021-யில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே மோதல்.
  • டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
  • முதல் இன்னிங்ஸ் முடிவில் கொல்கத்தா அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன்களை எடுத்தது.
IPL 2021, KKR vs RR: ராஜஸ்தான் அணிக்கு இலக்கு 134, ஸ்கோர்: KKR-133/9 title=

IPL 2021, KKR vs RR: கொரோனா தொற்றுக்கு மத்தியில் IPL 2021 சென்னை மற்றும் மும்பை நகரங்களில் நடந்து வருகிறது. தொற்றின் காரணமாக, வழக்கமாக பல நகரங்களில் நடக்கும் IPL போட்டிகள் இந்த ஆண்டு இந்த இரு நகரங்களில் மட்டும் பார்வையாளர்கள் இல்லாமல் நடக்கின்றன.

IPL 2021-ல் இன்று நடந்துகொண்டிருக்கும் 18 வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) இடையேயான போட்டி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸ் முடிவடைந்துள்ள நிலையில், கொல்கத்தா அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன்களை எடுத்தது. 

கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான், இரு அணிகளும் இது வரை 4 போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதால், இருவருக்கும் ஐந்தாவது போட்டியான இன்றைய போட்டி மிக முக்கியமானதாக பார்க்கபப்டுகின்றது. 

ALSO READ: RCB vs RR அதிரடி சேஸிங்! பெங்களூரு அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

முன்னதாக, டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 54 ரன்களை எடுத்திருந்தது. நிதீஷ் ராணா 25 பந்துகளில் 22 ரன்கள் எடுத்த பின்னர் பெவிலியனுக்கு திரும்பினார்.

15 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா அணி (Kolkata Knoght Riders) 4 விக்கெட்டுகளை இழந்து 93 ரன்களை எடுத்திருந்தது. ஆட்ட நேர இறுதியில், ராஜதான் அணிக்கு 134 ரன்களுக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணி விவரங்கள் பின் வருமாறு:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி: எயோன் மோர்கன் (கேப்டன்), நிதீஷ் ராணா, சுப்மான் கில், ராகுல் திரிபாதி, , தினேஷ் கார்த்திக், சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸ்ஸல், பாட் கம்மின்ஸ், கமலேஷ் நாகர்கோட்டி, வருண் சக்ரவர்த்தி, பிரசீத் கிருஷ்ணா ஹஸ்க்ப் சிங் .

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி: சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஜோஸ் பட்லர், மனன் வோஹ்ரா, டேவிட் மில்லர், சிவம் தூபே, ரியான் பராக், ராகுல் தெவாதியா, கிறிஸ் மோரிஸ், ஸ்ரேயஸ் கோபால், சேதன் சகாரியா, முஸ்தாபிஸூர் ரஹ்மான், ஜெய்தேவ் உனட்கட், ஆண்ட்ரூ டை, லியாம் லிவிங்ஸ்டன் , கே.சி. காரியப்பா, மஹிபால் லோமர், மாயங்க் மார்க்கண்டே, அனுஜ் ராவத், கார்த்திக் தியாகி, குல்தீப் யாதவ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஆகாஷ் சிங்.

ALSO READ: HBD Sachin: கொரோனாவிலிருந்து குணமடைந்த சச்சின் பிளாஸ்மா தானம் செய்யப்போவதாகக் கூறியுள்ளார்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News