தினேஷ் கார்த்திக் இந்தியன் பிரீமியர் லீக்கில் பல அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார், இந்த ஆண்டு ஏலத்தில் ஆர்சிபி அவரை தங்களது அணியில் எடுத்தது.  ஐபிஎல் 2022க்கு முன்னதாக, ஐபிஎல் மெகா ஏலத்தில் தினேஷ் கார்த்திக்கை ரூ 5.50 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வாங்கியது. ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸிடம் இருந்து கடுமையான போட்டியை முறியடித்து ஆர்சிபி கடைசியாக கார்த்திக்கை வாங்கியது. ஐபிஎல் 2022-ல் ஆர்சிபி அணிக்காக பல சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தியதன் மூலம், ஆர்சிபி அணியை பிளே ஆப்பிற்கு கொண்டு சென்றார்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | 2011 ஆம் ஆண்டு இதே நாளில்: சிஎஸ்கே கோப்பை வென்ற சுவாரஸ்ய கதை!


இருப்பினும், குவாலிஃபையர் 2-ல் ராஜஸ்தான் ராயல்ஸிடம் தோற்றதைத் தொடர்ந்து, முதல் ஐபிஎல் பட்டத்தை வெல்லும் RCB-ன் நம்பிக்கை முடிவுக்கு வந்தது.  தோல்விக்குப் பிறகு, தினேஷ் கார்த்திக் ரசிகர்களுக்கு உருக்கமான கடிதம் எழுதி உள்ளார்.  அவரது முழு ஐபிஎல் வாழ்க்கையிலும், கார்த்திக் டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ், RCB (2022 சீசனுக்கு முன்), குஜராத் லயன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார்.


"நான் பல அணிகளில் அங்கம் வகித்துள்ளேன், ஆனால் இதுவே நான் அங்கம் வகிக்கும் சிறந்த ரசிகர் பட்டாளம், ஏனென்றால் மைதானத்தில் நான் பெற்ற மகிழ்ச்சி, வேறு எங்கும் நான் பெற்றதில்லை. உங்களைப் போன்ற ரசிகர்கள் பெற்றதில், நான் உண்மையிலேயே நன்றியுள்ளவனாக இருக்கிறேன். மிக்க நன்றி, நண்பர்களே, நீங்கள் என் வாழ்க்கையில் நிறைய அர்த்தப்படுத்துகிறீர்கள், நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த உரிமையையும், என்னை திறந்த கரங்களுடன் ஏற்றுக்கொண்ட இந்த ரசிகர் பட்டாளத்தையும் நான் கண்டுபிடித்ததற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அடுத்த சீசனில் நாங்கள் கடுமையாக முயற்சிப்போம்,"  என்று ஆர்சிபியின் அதிகாரப்பூர்வ யூடியூப் ஹேண்டில் வெளியிட்ட வீடியோவில் கார்த்திக் கூறினார்.



RCB-ன் பிளேஆஃப் பயணத்தில் தினேஷ் கார்த்திக் பங்கு இன்றி அமையாதது.  இந்த சீசனில் அணிக்காக அதிக ரன்கள் எடுத்தவர்களில் நான்காவது இடத்தில் உள்ளார், பெரும்பாலும் இறுதி ஓவர்களில் அதிக ரன்களை அடித்தார்.  கார்த்திக் இன்னும் 16 போட்டிகளில் 55 சராசரி மற்றும் 183.33 ஸ்ட்ரைக்-ரேட்டில் 330 ரன்கள் எடுத்தார். உண்மையில், கார்த்திக்கின் ஸ்ட்ரைக்-ரேட் இந்த சீசனில் 200 ரன்களுக்கு மேல் எடுத்த எந்த வீரரை கம்பேர் செய்தாலும் சிறந்ததாக உள்ளது.


மேலும் படிக்க | ஐபிஎல் சுவாரஸ்யங்கள்: 4வது இடத்தில் இருக்கும் அணி கோப்பை வென்றது இல்லையா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR