சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று நடைபெற்றது. சென்னை அணிக்கு முக்கியமான இந்த போட்டியில் முன்னாள் கேப்டன் ஜடேஜா அணியில் இடம்பெறவில்லை, இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காயம் காரணமாக இந்த போட்டியில் ஜடேஜா விளையாடவில்லை என்று அணி நிர்வாகம் தெரிவித்து இருந்தது. முன்னதாக பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் கேட்ச் பிடிக்கும் பொது காயம் ஏற்பட்டிருந்தது.  இதன் காரணமாக டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஜடேஜா அணியில் சேர்க்கப்படவில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | IPL2022: குஜராத் - லக்னோ வெற்றிக்கு முக்கியமான 3 காரணங்கள் 


10 போட்டிகளில் 7ல் தோல்வியுற்ற சென்னை அணி புள்ளி பட்டியலில் 9 வது இடத்தில் இருந்தது.  இந்நிலையில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப்பிற்கு செல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று இருந்த நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது. வழக்கம் போல சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஓப்பனிங் வீரர்கள் ருதுராஜ் மற்றும் கான்வே சிறப்பாக விளையாடி அணிக்கு ரன்களைச் சேர்த்தனர். இதன் காரணமாக சென்னை அணி எளிதாக 200 ரன்களுக்கு மேல் அடிக்க முடிந்தது.  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பவுலிங்கும் சிறப்பாக இருந்ததால் டெல்லி அணி 117 ரன்களில் ஆல் அவுட் ஆனது.



இந்த சீசன் தொடக்கத்தில் தோனிக்கு பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஜடேஜா செயல்படுவார் என்று சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.  ஜடேஜாவின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வந்தது. பின்பு ஜடேஜா தனது பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேப்டன் பதவியை மீண்டும் தோனிக்கு கொடுத்தார்.  தற்போது தோனி தலைமையில் சென்னை அணி சிறப்பாக விளையாடி வருகிறது.  இன்னும் 3 போட்டிகள் மீதம் உள்ள நிலையில் மூன்றிலும் வெற்றி பெற்றால் பிளே ஆப் வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளலாம்.



மேலும் படிக்க | ஐபிஎல் 2022-ல் 20வது ஓவரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR