ஐபிஎல் 2022-ல் 20வது ஓவரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள்

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

பிளே ஆஃப் தீர்மானிக்கும் போட்டிகள் நடைபெறும் சூழலில் 20வது ஓவரில் அதிக ரன்கள் அடித்தவர்கள் யார் என்பதை பார்க்கலாம்

1 /4

முதல் இடத்தில் இருப்பவர் சன்ரைசர்ஸ் அணியின் நிக்கோலஸ் பூரன். இவர் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் 20 ஓவரில் 23 ரன்கள் எடுத்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்த ரன்களை அவர் அடித்தார்

2 /4

இரண்டாவது இடத்தில் தினேஷ்கார்த்திக் இருக்கிறார். இவர் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 20வது ஓவரில் 22 ரன்கள் விளாசினார். இந்தப் போட்டியில் 8 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் 30 ரன்கள் விளாசினார்.

3 /4

3வது இடத்தில் கைரன் பொல்லார்டு இருக்கிறார். இவரும் 22 ரன்களை அடித்திருக்கிறார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 20 ஓவரில் 22 ரன்களை விளாசினார்.

4 /4

4வது இடத்தில் டெல்லி வீரர் ரோவ்மன் பவல் உள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஒவரை எதிர்கொண்ட பவல், 20 ரன்களை விளாசினார்.