வரும் மார்ச் 26 ஆம் தேதி முதல் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022-ன் போட்டிகள் நடைபெற உள்ளது.   ஐபிஎல் 2021 இறுதியில் ஆர்சிபி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்தார். உலக கோப்பை போட்டிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்தும் விலகினார் கோலி.  ஆர்சிபி மற்றும் பஞ்சாப் அணிகள் தங்களது புதிய கேப்டனை அறிவிக்காமல் இருந்த நிலையில், சமீபத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி தனது புதிய கேப்டனாக மயங்க் அகர்வாலை நியமித்துள்ளது. ஐபிஎல் 2022 சீசனுக்கான கேப்டனை 9 அணிகள் அறிவித்துள்ள நிலையில் ஆர்சிபி மட்டுமே எஞ்சியுள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | விராட் கோலிக்கு அவமரியாதை - பிசிசிஐ மீது கவாஸ்கர் அதிருப்தி


கடந்த மாதம் ஐபிஎல் 2022 மெகா ஏலத்திற்குப் பிறகு, விராட் கோலிக்கு பதிலாக க்ளென் மேக்ஸ்வெல், ஃபாஃப் டு பிளெசிஸ் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரில் ஒருவரை புதிய கேப்டனாக அறிவிக்க ஆர்சிபி விரும்பியது.  “விரைவில் ஆர்சிபி கேப்டன் பெயர் அறிவிப்பு வரும். அணியின் பயிற்சியாளர் மற்றும் உரிமையாளர் ஆகியோர் இதற்கான வேளைகளில் உள்ளனர்" என்று ஆர்சிபி நிர்வாகத்தில் இருந்தும் தகவல் வந்தது.  



ஆர்சிபி அணியில் டு பிளெசிஸ் மற்றும் க்ளென் மேக்ஸ்வெல் இருவரும் கேப்டன்சி அனுபவம் உள்ளவர்கள், ஆர்சிபி அணி நிர்வாகம் மேக்ஸ்வெல்லை கேப்டனாக அறிவிக்க முடிவு செய்திருந்த நிலையில் இந்த மாத இறுதியில் அவருக்கு திருமணம் நடைபெற இருப்பதால் ஐபிஎல் 2022 தொடக்க போட்டிகளில் அவர் விளையாட மாட்டார்.  இதனால் தற்போது ஆர்சிபி குழப்பத்தில் உள்ளது.  ஆர்சிபி அணி நிர்வாகம் தினேஷ் கார்த்திக்கின் பெயரையும் கேப்டன் லிஸ்டில் சேர்த்து.  தினேஷ் கார்த்திக் 2015ல் ஆர்சிபிக்காக விளையாடினார்.  மேலும், கடந்த காலங்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாகவும் தலைமை தாங்கினார்.



"எங்களிடம் ஏராளமான விருப்பங்கள் உள்ளன, ஒவ்வொரு வீரரும் மிகவும் திறமையான கேப்டன்கள். கோஹ்லியையும் ஆர்சிபியையும் தினேஷுக்கு நன்கு தெரியும். மேக்ஸ்வெல் கடந்த சீசனில் இருந்து ஆர்சிபி அணியில் இருக்கிறார்,  ஃபாஃப் தென்னாப்பிரிக்காவின் ஒரு அற்புதமான கேப்டனாக இருந்தார். ஆனால் எங்களுக்கு யார் சிறந்தவர் என்பதை நாங்கள் தீர்மானிக்க வேண்டும்” என்று ஆர்சிபி தரப்பில் கூறப்படுகிறது.   


ஐபிஎல் 2022 கேப்டன்கள்:


சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) - எம்எஸ் தோனி


டெல்லி கேபிடல்ஸ் (டிசி) - ரிஷப் பந்த்


குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) - ஹர்திக் பாண்டியா


கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) - ஷ்ரேயாஸ் ஐயர்


லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) - கேஎல் ராகுல்


மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) - ரோஹித் சர்மா


பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) - மயங்க் அகர்வால்


ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) - சஞ்சு சாம்சன்


சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்.ஆர்.ஹெச்) - கேன் வில்லியம்சன்


மேலும் படிக்க | Punjab Kings கேப்டனானார் மயங்க் அகர்வால்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR