ஐபிஎல் 2023 ஏலத்திற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) சில வீரர்களை அணியில் இருந்து வெளியேற்றியுள்ளது.  டுவைன் பிராவோ, ராபின் உத்தப்பா, ஆடம் மில்னே, ஹரி நிஷாந்த், சாரிஸ் ஜோர்டான், பகத் வர்மா, கேஎம் ஆசிப், நாராயண் ஜெகதீசன் ஆகியோரை விடுவித்துள்ளது. ஐபிஎல் 2023-ல் தோனி சென்னை அணிக்கு கேப்டனாக செயல்பட உள்ளார்.  ஐபிஎல் 2022ல் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று, 10 போட்டிகளில் தோல்வியடைந்து ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது.  இதற்கிடையில், ஐபிஎல் 2023 ஏலம் டிசம்பர் 16 அன்று கொச்சியில் நடைபெறும். மீதமுள்ள பணத்திற்கு கூடுதலாக ஐந்து கோடிகள் அணிகளுக்கு கிடைக்கும். தற்போது சிஎஸ்கே வசம் 2.95 கோடிகள் உள்ளது.  ஐபிஎல் 2023-ல் சிஎஸ்கே குறி வைக்கும் 3 வீரர்களைப் பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க: தோனி செய்த கடைசி நிமிட மாற்றம்! இந்த வீரர்கள் CSK-யில் இனி இல்லை!


1) சாம் கர்ரன்


சாம் கர்ரன் ஐபிஎல் 2020 மற்றும் 2021-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளில் 23 ஆட்டங்களில், கர்ரன் 242 ரன்கள் குவித்து இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார். இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் சாம் கர்ரன் காயத்தால் ஐபிஎல் 2022ஐ தவறவிட்டார். 2022 டி20 உலகக் கோப்பை போட்டியில் ஆட்டநாயகன் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களில் இவரும் ஒருவர். 



2) புவனேஷ்வர் குமார்


தற்போதைய சென்னை அணியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் யாரும் இல்லை. சர்வதேச அனுபவமுள்ள ஒரே பந்துவீச்சாளர் தீபக் சாஹர் மட்டுமே. கிறிஸ் ஜோர்டனை சென்னை விடுவித்துள்ளதால் இந்திய வேகப்பந்து வீச்சாளரின் தேவை சிஎஸ்கே அணிக்கு உள்ளது. ஐபிஎல் தொடரில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் புவி. 



3) லிட்டன் தாஸ்


பங்களாதேஷ் தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ்க்கு ஐபிஎல்லில் அதிக தேவை உள்ளது. ஷகிப் அல் ஹசனைத் தவிர வேறு எந்த வீரரும் ஐபிஎல்லில் தொடர்ந்து விளையாடியதில்லை. ஏலத்தில் அதிக கவனத்தை ஈர்க்கக்கூடிய வீரர்களில் தாஸ் ஒருவராக இருக்கலாம். டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு எதிராக இவரது ஆட்டம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.


மேலும் படிக்க: ஐபிஎல் 2023 சிஎஸ்கே பட்டியல்: ரவீந்திர ஜடேஜா தக்கவைப்பு டுவைன் பிராவோ விடுவிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ