Ishan Kishan : உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளுக்கு மீண்டும் திரும்பியிருக்கிறார் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன். அவர் புச்சி பாபு கிரிக்கெட் தொடரில் விளையாட இருப்பதாக ஜார்க்கண்ட் அணி அறிவித்துள்ளது. அத்துடன் ஜார்க்கண்ட் அணிக்கு இஷான் கிஷன் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் புச்சி பாபு கிரிக்கெட் போட்டியில் விளையாடுவது குறித்து இஷான் கிஷன் எந்த ஒப்புதலும் தெரிவிக்காமல் இருந்ததால், அவரை இந்த தொடருக்காக அறிவிக்கப்பட்ட ஜார்க்கண்ட் அணியில் சேர்க்கப்படவில்லை. ஆனால், இந்த தொடர் தொடங்குவதற்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில், திடீரென புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் விளையாடுவதாக இஷான் கிஷன் தெரிவிக்க, அவரின் கோரிக்கையையும் ஜார்க்கண்ட் அணி ஏற்றுக் கொண்டு கேப்டனாகவும் நியமித்திருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Duleep Trophy 2024: நேருக்கு நேர் மோதப்போகும் ரோஹித் சர்மா - ஜஸ்பிரிட் பும்ரா?


அத்துடன் 2024 -25 ஆண்டுக்கான ரஞ்சி டிராபி போட்டிகளிலும் ஜார்க்கண்ட் அணிக்காக இஷான் கிஷன் களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அம்மாநில தேர்வுக்குழுவிடம் இஷான் கிஷன் பேசிவிட்டதாகவும், அதனடிப்படையில் மட்டுமே இப்போது அவருக்கு ஜார்க்கண்ட் மாநில அணியில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் நிர்வாகி ஒருவர் பேசும்போது, " இஷான் கிஷன் ஜார்க்கண்ட் அணிக்கு விளையாடுவது குறித்து நாங்கள் ஏற்கனவே விருப்பம் தெரிவித்தோம். ஆனால் அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இப்போது விளையாடுவதாக தெரிவித்ததால், புச்சி பாபு கிரிக்கெட் தொடருக்கு அவரையே கேப்டனாகவும் நியமித்திருக்கிறோம்" என கூறியுள்ளார்.


இதன்மூலம் சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளார் இஷான் கிஷன். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட இஷான் கிஷன், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இடம்பிடித்திருந்தார். ஆனால் போதிய வாய்ப்பு கிடைக்காததால் அதிருப்தி அடைந்த இஷான் கிஷன் தனக்கு ஓய்வு வேண்டும் என கேட்டுவிட்டு தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார். அதன்பிறகு அவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்கு பயிற்சியில் ஈடுபட்டார். ஆனால், அவர் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என பிசிசிஐ அறிவுறுத்தியது.


அதனை இஷான் கிஷன் புறக்கணித்ததால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) மத்திய சம்பள பட்டியலில் இருந்து அவரது பெயர் அதிரடியாக நீக்கப்பட்டது. இதனால் பெரும் பின்னடைவை சந்தித்த இஷான் கிஷன் மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் என்றால் கட்டாயம் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற நிலை உருவானது. இதனடிப்படையிலேயே ஜார்க்கண்ட் அணிக்காக புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் விளையாட முடிவெடுத்திருக்கிறார். இந்த தொடரில் சிறப்பாக ஆடினால் அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பவும் வாய்ப்பு இருக்கிறது. 


மேலும் படிக்க | கிரிக்கெட் முதல் பேஸ்பால் வரை! 2028 ஒலிம்பிக்கில் சேர இருக்கும் புதிய விளையாட்டுகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ