கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர் முடிவடைந்தது. இந்த தொடரில் எதிர்பாராத விதமாக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. இதனை தொடர்ந்து இந்திய அணி ஒரு மாத காலம் ஓய்வில் இருக்க உள்ளது. அடுத்த மாதம் செப்டம்பர் 19ஆம் தேதி பங்களாதேஷிற்கு எதிராக இரண்டு டெஸ்ட் தொடரில் மீண்டும் விளையாடுகிறது. இதற்கிடையில் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி 2024 துலிப் டிராபி போட்டிகள் தொடங்க உள்ளது. இதில் இந்திய அணியின் முக்கிய வீரர்கள் அனைவரும் விளையாடுவார்கள் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் துலிப் டிராபி காண ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.
மேலும் படிக்க | கிரிக்கெட் முதல் பேஸ்பால் வரை! 2028 ஒலிம்பிக்கில் சேர இருக்கும் புதிய விளையாட்டுகள்!
வழக்கமாக துலிப் டிராபியில் வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு, மத்திய மற்றும் வடகிழக்கு என மொத்தம் 6 அணிகள் பங்குபெறும். இது ஒரு பாரம்பரியமான மண்டல போட்டியாக இருந்து வருகிறது. ஆனால் இந்த ஆண்டு இதில் சில மாற்றங்களை செய்துள்ளது பிசிசிஐ. இந்த ஆண்டு 6 அணிகளுக்கு பதிலாக மொத்தம் 4 அணிகள் மட்டுமே பங்கேற்க உள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் எந்த ஒரு அணியும் பிராந்திய கட்டுப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டிருக்காது. அதற்கு பதில் A, B, C, D என்று வகைப்படுத்தப்பட உள்ளது. இந்த ஆண்டு முழுவதும் டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் இந்தியாவில் உள்ள சிறந்த டெஸ்ட் வீரர்களை வெளிக்கொண்டு வர அஜித் அகர்கர் தலைமையிலான தேசிய தேர்வு குழு முழு முயற்சியில் இறங்கி உள்ளது.
துலீப் டிராபியில் யார் யார் விளையாட உள்ளனர்?
இந்திய தேசிய அணியில் உள்ள வீரர்களும், உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்களும் துலிப் டிராபியில் விளையாட உள்ளனர். A, B, C, D என நான்கு அணிகளுக்கும் ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, ஷுப்மான் கில், ரிஷாப் பந்த் ஆகியோர் கேப்டன்களாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. மொத்தம் 4 அணிகளில் 8 தொடக்க ஆட்டக்காரர்கள் களமிறங்க உள்ளனர். இதன் மூலம் சிறந்த தொடக்க ஜோடியை பிசிசிஐ கண்டறிய முடியும். ரோஹித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஏற்கனவே டெஸ்டில் தொடக்க வீரர்களாக உள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேல் இந்திய அணியில் விளையாடாத ப்ரித்வி ஷா, சமீபத்தில் சிறப்பாகா விளையாடி வரும் ருதுராஜ் கெய்க்வாட், தேவ்தத் படிக்கல், அபிமன்யு ஈஸ்வரன், மயங்க் அகர்வால் மற்றும் சாய் சுதர்ஷன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறக்க வாய்ப்புள்ளது.
மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக விராட் கோலி, சேட்டேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே, ஹனுமா விஹாரா, ஷுப்மான் கில், கேஎல். ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ரஜத் படிதார், சர்பராஸ் கான், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் விளையாட உள்ளனர். விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பந்த், துருவ் ஜூரல், இஷான் கிஷன், KS பாரத், கேஎல் ராகுல் ஆகியோர் விளையாடுவார்கள். ஆல்-ரவுண்டர்களாக ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர் இடம் பெற வாய்ப்புள்ளது. சுழற்பந்து வீச்சாளர்களாக ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், சௌரப் குமார், ஷம்ஸ் முலானி ஆகியோர் வருகின்றனர். மேலும் வேகப்பந்து வீச்சாளர்களாக ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், ஆகாஷ்தீப், அவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, மயங்க் யாதவ், உம்ரான் மாலிக், உமேஷ் யாதவ் ஆகியோர் விளையாடலாம்.
துலீப் டிராபி 2024 - உத்ததேச A, B,C, D அணி:
இந்தியா A - ரோஹித் சர்மா (C), தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார், திலக் வர்மா, சர்பராஸ் கான், இஷான் கிஷன் (WK), வாஷிங்டன் சுந்தர், ஷம்ஸ் முலானி, முகமது சிராஜ், முகேஷ் குமார், பிரசித் கிருஷ்ணா.
இந்தியா B - ஜஸ்பிரிட் பும்ரா (C), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே, சூர்யகுமார் யாதவ், கே.எஸ் பாரத் (WK), சாய் கிஷோர், குல்தீப் யாதவ், ஆகாஷ்தீப், உம்ரான் மாலிக்.
இந்தியா C - ஷுப்மன் கில் (C), ருதுராஜ் கெய்க்வாட், அபிமன்யு ஈஸ்வரன், விராட் கோலி, ரிங்கு சிங், துருவ் ஜூரல் (WK), அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், உமேஷ் யாதவ், அர்ஷ்தீப் சிங், மயங்க் யாதவ்.
இந்தியா D - ரிஷப் பந்த் (C, WK), பிருத்வி ஷா, மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி, கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, சவுரப் குமார், முகமது ஷமி, அவேஷ் கான், யாஷ் தயாள்.
மேலும் படிக்க | ஒருநாள் போட்டிகளே இல்லை! டெஸ்ட், டி20 மட்டும் தான்! என்ன செய்ய போகிறது இந்தியா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ