ஐபிஎல் 2022ன் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளும் மோதின. வான்கடேவில் 7.30 மணிக்கு தொடங்கிய இந்தப் போட்டியில் கொல்கதா டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன்படி ராஜஸ்தான் அணிக்கு தேவ்தத் படிக்கலும், ஜோஸ் பட்லரும் தொடக்கம் தந்தனர். இத்தொடரில் பார்மில் இருக்கும் பட்லர் முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே பவுண்டரி அடித்து தனது ரன் கணக்கை தொடங்கினார். 


அதனையடுத்து 3ஆவது ஓவரில் படிக்கல் இரண்டு ரன்களுக்கு ஆட்டமிழந்தார். படிக்கல் வெளியேறியதைத் தொடர்ந்து களமிறங்கிய சஞ்சு சாம்சனுடன் பட்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக கொல்கத்தாவின் பந்துவீச்சை எதிர்கொண்டது.



நீண்ட நேரம் களத்தில் இந்த ஜோடி இருக்கும் என ரசிகர்கள் நினைத்த நேரத்தில் பட்லர் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் அந்த அணி பத்து ஓவர்களுக்குள்ளேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்து 55 ரன்களை எடுத்தது.


இதனையடுத்து சஞ்சு சாம்சனும், கருண் நாயரும் இணைந்தனர். கருண் நாயரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அவரைத் தொடர்ந்து ரியான் பராக் உள்ளே வந்தார்.


மேலும் படிக்க | ஜடேஜா சரியில்லையா? மீண்டும் கேப்டன் ஆனது குறித்து தோனி விளக்கம்!


ஒருமுனையில் பொறுப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் தனது அரைசதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து பராக்கும், சஞ்சுவும் கொல்கத்தா பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு விக்கெட் சரிவை தடுத்து நிறுத்தினர்.


அதேசமயம் ரன்ரேட் கம்மியாக இருந்ததால் ஸ்கோரை உயர்த்த வேண்டிய கட்டாயமும் உருவானது. இதன் காரணமாக அதிரடியாக ஆட முயன்ற ரியான் பராக் 19 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.ரியான் பராக்கை தொடர்ந்து சிக்சர் அடிக்க முயன்ற சஞ்சு சாம்சனும் 54 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்தவர்களும் பெரிய இன்னிங்ஸ் ஆடாததால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களுக்கு 152 ரன்களை எடுத்தது.



153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கொல்கத்தா அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஃபின்ச்சும்,இந்திரஜித்தும் களமிறங்கினர். 


மேலும் படிக்க | தோனி மாதிரி சேவாக், கம்பீரை ஆதரிக்காதது ஏன்? - யுவராஜ் சிங் ஆதங்கம்!


ஆனால் ராஜ்ஸ்தான் பந்துவீச்சை அவர் எதிர்கொள்ள சிரமப்பட்டனர். அதன் காரணமாக ஃபின்ச் 4 ரன்களில் நான்காவது ஓவரிலேயே நடையை கட்டினார்.


அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் இந்திரஜித்துடன் இணைந்தார். ப்ரசித்  கிருஷ்ணா ஓவரில் சிக்சர் அடித்த இந்திரஜித் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். இதனால் கொல்கத்தா அணி பவர் ப்ளேக்குள்ளே இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.



அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும் முனைப்பில் ஸ்ரேயாஸும், நிதிஷ் ராணாவும் விளையாடினர். தேவைப்பட்ட நேரத்தில் அதிரடியாக விளையாடிய ராணா அஷ்வின் வீசிய 11ஆவது இரண்டு பவுண்டரிகள், ஒரு சிக்சர் அடித்து அசத்தினார்.


இதனால் சோர்ந்திருந்த கொல்கத்தா ரசிகர்கள் எழுந்து அமர்ந்தனர். அவரைத் தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயரும் சஹால் ஓவரில் சிக்சர் அடித்தார். இதனால் இந்த ஜோடி 37 பந்துகளில் 50 ரன்களைக் கடந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக போல்ட் பந்துவீச்சில் ஸ்ரேயாஸ் ஐயர் 34 ரன்களில் ஆட்டமிழந்தார்.


அதன் பிறகு ரிங்குவுடன் ஜோடி போட்டார் நிதிஷ். ரிங்குவும் வந்த வேகத்திலேயே அதிரடியை கையில் எடுக்க கொல்கத்தா ரசிகர்களுக்கு நம்பிக்கை பிறந்தது.அந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் இந்த ஜோடி ராஜஸ்தானின் பந்துவீச்சை எந்தவித பதற்றமுமின்றி எதிர்கொண்டு 50 ரன்களை சேர்த்தது.


தொடர்ந்து விளையாடிய இருவரும் தேவையான இலக்கை  5 பந்துகளை மீதம் வைத்து அடைந்தனர். இதனால் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தி வென்றது.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR