ஜடேஜா சரியில்லையா? மீண்டும் கேப்டன் ஆனது குறித்து தோனி விளக்கம்!

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.  

Written by - RK Spark | Last Updated : May 2, 2022, 10:39 AM IST
  • மீண்டும் சென்னை அணி கேப்டன் ஆனா தோனி.
  • ஜடேஜா பேட்டிங்கில் கவனம் செலுத்த திட்டம்.
  • சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
ஜடேஜா சரியில்லையா? மீண்டும் கேப்டன் ஆனது குறித்து தோனி விளக்கம்! title=

ஐபிஎல் 2022 போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு சிஎஸ்கே அணியின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகி உள்ளதாகவும், ஜடேஜா கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னை அணியின் நிர்வாகம் தெரிவித்தது. இது தோனி ரசிகர்கள் இடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.  கடந்த ஆண்டு தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4வது முறையாக கோப்பையை கைப்பற்றி இருந்தது. 

dhoni

மேலும் படிக்க | சென்னை அணிக்கு புதிய ரூபத்தில் திரும்பிய ஷர்துல் தாக்கூர்!

ஐபிஎல் ஏலத்தில் பல முக்கிய வீரர்களை இழந்து இருந்த சென்னை அணி ஜடேஜாவின் தலைமையில் ஒரு புதிய சிஎஸ்கே அணியாக இந்த ஆண்டு களம் இறங்கியது. ஆனால் விளையாடிய 8 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று 6 போட்டிகளில் தோல்வியை சந்தித்து புள்ளிப் பட்டியலில் 9-வது இடத்தில் இருந்தது. எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த ஆண்டு மிகவும் மோசமான அணியாக சென்னை அணி இருந்தது.  பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் சொதப்பியது சென்னை அணி. இந்நிலையில் சென்னை அணியின் கேப்டனாக மீண்டும் தோனி தொடர்வார் என்ற அறிவிப்பு வெளியானது. இதனால் மீண்டும் சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனியை பார்க்கலாம் என்று சென்னையின் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர். தோனி கேப்டனாக திரும்பி வந்தவுடன் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி சிறப்பான வெற்றியை பெற்றது.

போட்டி தொடங்குவதற்கு முன்பு, தோனி அடுத்த ஆண்டு விளையாடுவீர்களா என்ற கேள்விக்கு, "நீங்கள் என்னை அடுத்த ஆண்டும் நிச்சயமாக மஞ்சள் நிற ஜெர்ஸியில் தான் பார்ப்பீர்கள். அது இதே பிளேயிங் லெவன் ஜெர்ஸியா இல்லை வேறு விதமான மஞ்சள் ஜெர்ஸியா என்பது எதிர்காலத்தில் தெரியும்" என்று சூசகமாக கூறி இருந்தார் எம்.எஸ்.தோனி.  இந்நிலையில் போட்டி முடிந்தவுடன் தோனி என்ன பேச போகிறார் என்று அனைவரும் ஆவலாக காத்து இருந்தனர்.  

dhoni

போஸ்ட் மேட்ச் பிரசன்டேஷனில் பேசிய தோனி, " ஜடேஜா இந்த ஆண்டு கேப்டனாக இருப்பார் என்று கடந்த சீசனில் அவருக்கு தெரியும்.  அவர் அதற்கு தயார் ஆகா சில அவகாசம் கிடைத்தது.  முதல் இரண்டு ஆட்டங்களில், நான் அவருக்கு உதவினேன்.  பின்னர் அவரை முழுவதுமாக அனைத்தையும் செய்ய அனுமதிக்கிறேன். அவர் தனது சொந்த முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் அவற்றுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் நான் வலியுறுத்தினேன்.  நீங்கள் கேப்டனாகிவிட்டால், நிறைய கோரிக்கைகள் வரும் என்று அர்த்தம். ஆனால் பணிகள் வளர வளர அது அவரது மனதை பாதித்தது. கேப்டன்சி அவரது தயாரிப்பு மற்றும் செயல்பாடுகளை சுமையாக மாற்றியதாக நான் நினைக்கிறேன்.  ஒவ்வொன்றாக சொல்லி கொடுப்பது கேப்டன்சிக்கு அழகு இல்லை.  களத்தில் நீங்கள் அந்த முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டும், அந்த முடிவுகளுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டும்.  நீங்கள் கேப்டனாக ஆனவுடன், நாங்கள் பல விஷயங்களைக் கவனிக்க வேண்டும், அதில் உங்கள் சொந்த ஆட்டமும் அடங்கும்" என்று கூறினார். 

மேலும் படிக்க | ருத்ரதாண்டவம் ஆடிய ருதுராஜ்; வென்றது சென்னை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News