ஐபிஎல் போட்டித்தொடரில் RCB இல் தனது வாழ்க்கையின் முக்கியமான மற்றும் மறக்கமுடியாத தருணங்களைப் பற்றி புல்லரித்து பேசுகிறார் விராட் கோலி  
  
கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மிகப்பெரிய ரசிகரான இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, போர்ச்சுகல் கால்பந்து பிரபலத்தின் மூளையை ஸ்கேன் செய்து பார்ப்பேன் என்று தெரிவித்து வைரலாகியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரொனால்டோவின் பணி நெறிமுறைகள் மற்றும் உடற்தகுதிக்கு பெரிய ரசிகரான கோஹ்லி, தனது ஐபிஎல் உரிமையாளரான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் போட்டோஷூட்டின் போது நட்சத்திர கால்பந்து வீரர் மீதான தனது அபிமான ஆசையை வெளிப்படுத்தினார்.


 



 


தனக்குப் பிடித்த விளையாட்டு வீரரைப் பற்றியும், அவரைப் போல் ஒருநாள் மாற முடிந்தால் என்ன செய்வார் என்றும் கேட்டதற்கு, கோஹ்லி சொன்ன பதில் வைரலாகிறது.


கிறிஸ்டியானோ ரொனால்டோ எனது விருப்பமான விளையாட்டு வீரர் என்றும், அவருக்கு சிறந்த மன வலிமை இருக்கிறறது,'' என்று ஆர்சிபியின் 'பிஹைண்ட் தி சீன்ஸ்' தொடரில் கோஹ்லி கூறினார்.


மேலும் படிக்க | மீண்டும் இந்திய அணியில் எம்.எஸ்.தோனி?


இந்த வீடியோவில் கோஹ்லி தனது இதயத்தை தொட்ட மற்றும் RCB இல் தனது வாழ்க்கையின் மறக்கமுடியாத தருணங்களைப் பற்றியும் கூறினார்.



கோஹ்லி 2016 சீசனில் 16 போட்டிகளில் 81.08 சராசரியுடன் 973 ரன்களை அடித்த போது ஒரு சீசனில் இதுவரை இல்லாத அதிக ரன்களை எடுத்து சாதனையை பதிவு செய்தார்.


ஐபிஎல் 2016 குவாலிஃபையர் 1ல் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான வெற்றியை அவர் எடுத்தார். "அந்த ஆட்டத்திற்குப் பிறகு நடந்த கொண்டாட்டம் நான் அனுபவித்ததில் மிகவும் சிறப்பு வாய்ந்தது" என்று கோஹ்லி தெரிவித்தார்.


இந்த வீடியோவில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் மற்றும் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் ஆகியோர் ரோஜர் பெடரரை தனக்கு பிடித்த விளையாட்டு வீரராக தேர்ந்தெடுத்தனர்.


மேலும் படிக்க | IPL2022: சென்னை - மும்பையை வெளியேற்றி ஐபிஎல் பைனலுக்கு போகப்போகும் அணி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR