ஐபிஎல் 2022 போட்டிகள் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு, எம்எஸ் தோனி சிஎஸ்கே கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார், மேலும் தோனி ஐபிஎல்லில் இருந்து விலகுவதற்கான முதல் அடியாக இந்த முடிவு பார்க்கப்பட்டது. தற்போது சென்னை அணியின் கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டு இருந்தார்.
மேலும் படிக்க | IPL 2022: சிஎஸ்கேவின் தோல்வி குறித்து ரெய்னா மறைமுக சாடல்
2021 உலக கோப்பையில் இந்திய அணி அரையிறுதிக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறி அதிர்ச்சி அளித்தது. இருப்பினும் தோனிக்கு இந்திய அணியில் மீண்டும் இடம் பெற வேண்டும் என்ற எண்ணம் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. சாம்பியன்ஸ் டிராபி 2013க்குப் பிறகு இந்தியா ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்லவில்லை. சில போட்டிகளில் பைனல் வரை சென்று தோல்வி அடைந்துள்ளது. கிட்டதட்ட 9 வருடங்களாக எந்த கோப்பையையும் இந்திய வெல்லவில்லை.
இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனி, தனது பொறுப்பை விராட் கோஹ்லியிடம் ஒப்படைத்தார். கோலி தலைமையில் இந்தியா நிறைய வெற்றிகளை பெற்றாலும், ஐசிசி கோப்பையை வெல்லவில்லை. தற்போது இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராட், புதிய கேப்டனான ரோஹித் சர்மாவின் கீழ் விளையாடி வருகிறார். இந்த வருட டி20 உலக கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா விளையாட உள்ளது.
இந்திய அணியின் முழுநேர பயிற்சியாளராக டிராவிட் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார். டிராவிட் இதற்கு முன்னர் 3 வருடங்களாக U19 அணிக்கு பயிற்சியாளராக இருந்தார். இந்நிலையில் டிராவிட்க்கு பிறகு இந்திய அணியின் பயிற்சியாளராக தோனி தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வருட ஐபிஎல் போட்டிகள் முடிந்தவுடன் தோனி அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து ட்ராவிட்டின் பதவி காலம் முடிந்த பின்னர் பயிற்சியாளர் பதவிக்கு தோனி விண்ணப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | தோனியின் இந்த முடிவால் நொறுங்கிப்போனேன் - வருந்தும் சிஎஸ்கே வீரர் Video
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR