கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற லக்னோ!
சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல் 2022-ன் 12-வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் சீன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி DY படேல் ஸ்டேடியத்தில் இரவு 7.30க்கு தொடங்கியது. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பீல்டிங் தேர்வு செய்தார். சன்ரைசர்ஸ் அணி தனது முதல் போட்டியில் தோல்வி அடைந்ததால் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.
மேலும் படிக்க | மீண்டும் இந்திய அணியில் எம்.எஸ்.தோனி?
லக்னோ சூப்பர் சீன்ஸ் அணிக்கு ஓபனிங் படுமோசமாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர் குயின்டன் டி காக் மற்றும் லீவிஸ் ஒரு ரன்களுக்கு வெளியேறினர். மனிஷ் பாண்டே 11 ரன்களுக்கு அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். லக்னோ 27 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்பு ஜோடி சேர்ந்த கேப்டன் ராகுல் மற்றும் தீபக் ஹூடா அணியை சரிவில் இருந்து மீட்டனர். ராகுல் 68 ரன்களும், ஹூடா 51 ரன்களும் எடுக்க லக்னோ அணி ஒரு மதிக்கத்தக்க ஸ்கோரை எட்டியது. 20 ஓவர் முடிவில் லக்னோ 7 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் எடுத்தது.
சன் ரைசர்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்தில் இருந்தே நிதானமாக ஆடி வந்தனர். அபிஷேக் சர்மா 13, கேன் வில்லியம்சன் 16 ரன்களுக்கு வெளியேறினர். ராகுல் திரிபாதி மற்றும் நிக்கோலஸ் பூரன் மட்டுமே சன் ரைசர்ஸ் அணியில் சொல்லும்படியான ரன்களை அடித்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வாஷிங்டன் சுந்தர் 18 ரன்களை கடைசி ஓவரில் வெளியேறினார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஜேசன் ஹோல்டர் சிறப்பாக பந்துவீசி லக்னோ அணியை வெற்றி பெறச் செய்தார். இந்த போட்டியில் லக்னோ அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேலும் படிக்க | IPL2022: சென்னை - மும்பையை வெளியேற்றி ஐபிஎல் பைனலுக்கு போகப்போகும் அணி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR